தவறான எண்ணிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? கவலை வேண்டாம்.. 48 மணி நேரத்தில் திரும்ப பெறலாம்

UPI Wrong Payment Refund : உங்கள் பணம் தவறான எண்ணிற்கு அனுப்பிருந்தால் நீங்கள் புகாரளித்த இரண்டு வேலை நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்குள் அதை திரும்பப் பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) கூறியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2023, 11:43 AM IST
  • UPI மூலம் பணம் செலுத்தும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • நாம் பலமுறை தவறுதலாக வேறு கணக்கில் பணம் செலுத்தி விடுகிறோம்.
  • ஆனால் இதனால் இனி கவலை கொள்ளத் தேவையில்லை.
தவறான எண்ணிற்கு பணம் அனுப்பிட்டிங்களா? கவலை வேண்டாம்.. 48 மணி நேரத்தில் திரும்ப பெறலாம் title=

UPI Wrong Payment Refund Guidelines: யுபிஐ பேமெண்ட் ஆப் மூலம் பணம் செலுத்தும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நாம் பலமுறை தவறுதலாக வேறு கணக்கில் பணம் (Wrong Transaction) செலுத்தி விடுகிறோம். இது பெரும்பாலும் அவசரத்தால் நிகழ்கிறது. அதன் பிறகு நாம் அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட நேரங்களில் நாம் அதிக கவலைக்கு ஆளாகிறோம். ஆனால் இதனால் இனி கவலை கொள்ளத் தேவையில்லை. கவலைப்படுவதற்கு பதிலாக, சரியான நேரத்தில் புகார் அளித்து உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி கூறுவது என்ன?

உங்கள் பணம் தவறான கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தால், நீங்கள் புகாரளித்த 2 வேலை நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்குள் அதை திரும்பப் பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India)  கூறியுள்ளது. யுபிஐ மூலம் நீங்கள் பணத்தை வேறு கணக்கில் செலுத்திவிட்டால், உங்கள் பணத்தை நீங்கள் திரும்பப் பெறக்கூடிய அனைத்து செயல்முறைகளையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.  

யுபிஐ ஆப் புகார் எண்கள் :

நீங்கள் தவறான எண்ணில் பணம் செலுத்தியிருந்தால், முதலில் நீங்கள் ஃபோன்-பே, கூகுள் பே, பேடிஎம் (Phone-pay, Google pay, Paytm போன்ற கட்டண தளத்தின் ஹெல்ப்லைன் எண்ணை(UPI Helpline Number) அழைக்க வேண்டும். அங்கு கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் அங்கு கொடுக்க வேண்டும்.

நாட்டின் பிரபலமான யுபிஐ ஆப்களின் புகார் எண்கள்:

- ஃபோன்-பே (Phone-pay) ஹெல்ப்லைன் எண்-1800-419-0157
- கூகுள் பே (Google Pay) ஹெல்ப்லைன் எண்- 080-68727374 / 022-68727374
- பேடிஎம் (Paytm) ஹெல்ப்லைன் எண்- 0120-4456-456
- பீம் (BHIM) ஹெல்ப்லைன் எண்- 18001201740, 022- 45414740

NPCI இடம் புகார் செய்ய வேண்டும்

இதற்குப் பிறகு, நீங்கள் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) இணையதளத்திற்குச் சென்று புகார் அளிக்க வேண்டும். இதனுடன், கூடிய விரைவில் உங்கள் வங்கியிலும் இது குறித்து புகார் அளிக்க வேண்டும்.

மேலும் படிக்க | Post Office MIS திட்டம்: வட்டியிலேயே லட்சக்கணக்கில் லாபம், மாதா மாதம் பம்பர் வருமானம்

புகார் செய்ய இந்த செயல்முறைகளை பின்பற்றவும்

- முதலில் நீங்கள் BHIM ஹெல்ப்லைன் எண்ணான 18001201740 -ஐ அழைக்கவும். கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் இங்கே கொடுக்க வேண்டும். 

- இதற்குப் பிறகு, பிபிபிஎல், எண் (நீங்கள் தவறாகப் பணம் செலுத்திய எண்) போன்ற பரிவர்த்தனையின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உங்கள் வங்கியில் புகாரைப் பதிவு செய்யவும்.

- குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான செயல்முறையை வங்கி முடிக்கவில்லை என்றால், அதன் இணையதளத்திற்கு சென்று லோக்பாலுக்கு அதைப் பற்றி புகார் செய்யலாம்.

- புகார் செயல்முறை முடிந்ததும், உங்கள் பரிவர்த்தனை சரிபார்க்கப்படும்.

- அதன் பிறகு உங்கள் பணம் 2 முதல் 3 வேலை நாட்களில் திருப்பித் தரப்படும்.

பணம் திரும்பப்பெற செய்யவேண்டியவை:

உங்கள் பணம் தவறான கணக்கிற்குச் சென்றிருந்தால், அனைத்து சட்டப்பூர்வ செயல்முறைகளையும் மேற்கொள்வதைத் தவிர, நீங்கள் தவறாக பணம் செலுத்திய எண்ணையும் தொடர்பு கொள்ள வேண்டும். பணத்தைத் திருப்பித் தருமாறு அந்த நபரிடம் நீங்கள் கோரலாம்.

 UPI பரிவர்த்தனை வரம்பு

சமீபத்தில் மருத்துவம் மற்றும் கல்வி சேவைகளுக்கான யுபிஐ பரிவர்த்தனை(UPI Payment Limit) வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது. வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் முந்தைய விகிதத்திலேயே தொடரும் என அறிவித்த ரிசர்வ் வங்கி, UPI மற்றும் ஃபின்டெக் ஈகோசிஸ்டம் அமைப்பு மற்றும் நிதிச் சந்தைகளில் பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிவித்தது.

மேலும் படிக்க | வேலையை மாற்றியபின் இபிஎஃப் கணக்குகளை மர்ஜ் செய்யாவிட்டால் நஷ்டம்: செயல்முறையை இங்கே காணலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News