கால் காசானாலும் கவர்மெண்டு சம்பளமா இருக்கனும் என்ற பழமொழி சில காலம் பழுத்த மொழியாக மாறியிருந்தது. ஆனால், தற்போது பழமொழி புதுயுகத்தின் விருப்பமாகவும் மாறிவிட்டது. கொரோனா போன்ற கொடூர நோய்த்தொற்றுக் காலத்தில் அரசு வேலை என்பது அனைவரின் முதல் விருப்பமாக இருக்கிறது.
பணி நிரந்தரம், வேலை பறிபோகாது என்பது போன்ற பல அடிப்படை விஷயங்களை பூர்த்தி செய்கிறது அரசுப் பணி. பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்காக ஆட்சேர்ப்பு நடத்துகின்றன. இவற்றில் உங்களுக்கு பிடித்த வேலை இருந்தால், அதற்கான தகுதியும் இருந்தால், உடனே விண்ணப்பிக்கவும்.
அரசுத்துறையில் காலியான பணியிடங்கள் எங்கே இருக்கிறது? அதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்
நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு அரசு வேலை. நீங்களும் அரசு வேலை தேடுகிறீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கானது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விளம்பரம் வெளியாகியுள்ளது. அதோடு, ஐடிபிஐ வங்கி 920 பணியிடங்களுக்கான காலியிடத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று விளம்பரம் செய்துள்ளது.
Also Read | TN District Wise corona update August 05: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு
இந்திய தபால் துறையில் காலியிடங்கள்
மேற்கு வங்க அஞ்சல் வட்டத்தில் கிராமங்களில் தபால் ஊழியர் (Gramin Dak Sevak) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை இந்திய அஞ்சல் சேவை துறை வெளியிட்டுள்ளது. தேர்வு செயல்முறை மூலம், மொத்தம் 2357 கிளை தபால் மாஸ்டர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் டக் சேவக் (டிஎஸ்) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப செயல்முறை தொடங்கிவிட்டது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள், இந்திய தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
920 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தும் ஐடிபிஐ
ஐடிபிஐ வங்கி 920 பணியிடங்களுக்கான காலியிடங்களை வெளியிட்டுள்ளது. வங்கியில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. வங்கி 920 நிர்வாக பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான idbibank.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காலியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறையும் தொடங்கிவிட்டது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Also Read | வரி பிடிப்பு கணக்கு எண் என்றால் என்ன, அதற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?
எம்பிஎஸ்சி பிரிலிம்ஸ் 2021 இன் துணை சேவைகள் தேர்வு
எம்பிஎஸ்சி பிரிலிம்ஸ் 2021 -ன் துணை சேவைகள் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு செப்டம்பர் 04, 2021 அன்று நடத்தப்படும். தேர்வு அட்டவணைக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் அதன் விவரங்களை mpsc.gov.in இல் பார்க்கலாம். MPSC ஆரம்பத் தேர்வு -2021 இன் கீழ் காவல் துணை ஆய்வாளர், உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் வரி ஆய்வாளர் உள்ளிட்ட 806 காலியிடங்களுக்காக நடத்தப்படுகிறது.
ஒடிசாவில் 1500 க்கும் மேற்பட்ட வேலைகள்
ஒடிசா பொது சேவை ஆணையம் (Odisha Public Service Commission) எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஒடிசா மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகள் குழு A (ஜூனியர் கிளை) இல் 1,586 மருத்துவ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் நடத்தப்படுகிறது.
இது ஒடிசா அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் வருகிறது. பதிவு செயல்முறை ஆகஸ்ட் 07, 2021 முதல் ஆகஸ்ட் 21, 2021 வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | மாத சம்பளம் வாங்குபவர்கள் ரூ.8 லட்சம் வரை வருமான வரியை சேமிக்க முடியும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR