Gold Rates Today: இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம் இதோ

மார்ச் 30 செவ்வாய்க்கிழமை தேசிய அளவில் ​​தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .42,980 ஆக சரிந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 30, 2021, 11:15 AM IST
  • தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி காணப்படுகிறது.
  • சென்னையில், தங்கத்தின் விலை 22 காரட் பத்து கிராம் தங்கம் 42,240 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 46,080 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
  • தங்க விகிதங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Gold Rates Today: இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய விலை நிலவரம் இதோ  title=

Gold Rate March 30 2021: மார்ச் 30 செவ்வாய்க்கிழமை தேசிய அளவில் ​​தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .42,980 ஆக சரிந்தது. இன்று தங்கம் நூறு கிராமுக்கு 100 ரூபாயும் பத்து கிராமுக்கு 10 ரூபாயும் குறைந்துள்ளது. 

22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை 42,980 ரூபாயாக உள்ளது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 43,980 ஆக உள்ளது. 24 காரட் 100 கிராம் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ .4,39,800 ஆக உள்ளது. 
பிப்ரவரியில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும், தங்கத்தின் விலை இந்த மாதம் கீழ்நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது. 

சென்னையில், தங்கத்தின் விலை (Gold Rate) 22 காரட் பத்து கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ரூ .42,240 ஆக உள்ளது. 24 காரட் தங்கம் 100 ரூபாய் குறைந்து ரூ. 46,080 ஆக உள்ளது. 

பல்வேறு வரி வகைகளுக்கு ஏற்றாற்போல, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தங்கத்தின் விலை மாறுபடுகிறது.
 
ALSO READ: Gold / Silver Price Today, March 28, 2021: தங்கத்தின் விலை 7,600 ரூபாய் குறைந்தது

முக்கிய மாநிலங்கள், நகரங்களில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை விவரத்தை காணலாம்:

கேரளா - ரூ .41,700

லக்னோ - ரூ 44,070

வதோதரா - ரூ 44,460

ஜெய்ப்பூர் - ரூ .44,070

கோவை - ரூ .42,240

மதுரை - ரூ 42,240

விஜயவாடா - ரூ .41,700

பாட்னா - ரூ .42,980

நாக்பூர் - ரூ 42,980

சண்டிகர் - ரூ .44,070

சூரத் - ரூ 44,460

புவனேஸ்வர் - ரூ .41,700

மங்களூர் - ரூ .41,700

விசாகப்பட்டினம் - ரூ .41,700

நாசிக் - ரூ .42,980

மைசூர் - ரூ .41,700.

முக்கிய மாநிலங்கள், நகரங்களில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை விவரத்தை காணலாம்:

கேரளா - ரூ .45,490

லக்னோ - ரூ 48,070

வதோதரா - ரூ 46,320

ஜெய்ப்பூர் - ரூ .48,070

கோவை - ரூ .46,080

மதுரை - ரூ 46,080

விஜயவாடா - ரூ .45,490

பாட்னா - ரூ .43,980

நாக்பூர் - ரூ .43,980

சண்டிகர் - ரூ .48,070

சூரத் - ரூ .46,320

புவனேஸ்வர் - ரூ .45,490

மங்களூர் - ரூ .45,490

விசாகப்பட்டினம் - ரூ .45,490

நாசிக் - ரூ .43,980

மைசூர் - ரூ .45,490.

மேலே குறிப்பிடப்பட்ட தங்க விலைகளில் சரக்கு மற்றும் சேவை வரி (GST), TCS மற்றும் பிற வரிகள் சேர்க்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்க விகிதங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Gold Rates Today: இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய தங்க விலை நிலவரம் எப்படி உள்ளது?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News