Gold Price today: உங்கள் ஊரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ

கடந்த 6 மாதங்களில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .10,000 அதாவது 18 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு ஆகஸ்டில் சாதனை அளவாக 10 கிராமுக்கு ரூ. 56,200 என்ற விலையைத் தொட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2021, 02:53 PM IST
  • சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .43,770 ஆக உள்ளது.
  • சென்னை மற்றும் ஹைதராபாத்தில் 1 கிலோகிராம் வெள்ளியின் விலை ரூ .73,800 ஆகும்.
  • பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நகரத்திலும் மாறுபடுகிறது.
Gold Price today: உங்கள் ஊரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ title=

Gold Price Today: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலையில் அதிக அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு உலகளாவிய பல காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும், இன்னு சில நாட்களில் தங்கத்தின் விலை உயரத் தொடங்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

எட்டு மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த மட்டத்தில் வர்த்தகம் செய்த பின்னர், பல பொருட்கள் பரிமாற்ற தளாமான MCX-ல் கோல்ட் ஃப்யூச்சர்ஸ் திங்களன்று 10 கிராமுக்கு 0.3 சதவீதம் உயர்ந்து ரூ .46,340 ஆக இருந்தது.

கடந்த 6 மாதங்களில் தங்கத்தின் விலை (Gold Price) 10 கிராமுக்கு ரூ .10,000 அதாவது 18 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் விலை கடந்த ஆண்டு ஆகஸ்டில் சாதனை அளவாக 10 கிராமுக்கு ரூ. 56,200 என்ற விலையைத் தொட்டது. மறுபுறம், இன்று வெள்ளி இன்று MCX-ல் 0.8% அதிகரித்து 69590 ரூபாயாக உள்ளது.

முக்கிய நகரங்களின் இன்றைய தங்க விலை நிலவரத்தைக் காணலாம்:

டெல்லி: தேசிய தலைநகரில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .45,410 ஆக இருந்தது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .49,440 ஆகும்.

சென்னை: 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .43,770 ஆகவும் 24 காரட் தங்கத்தில் விலை ரூ .47,750 ஆகவும் உள்ளது.

கொல்கத்தா: இங்கு 22 காரட் தங்கத்தின் விலை ரூ .45,560 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ .48,310 ஆகவும் உள்ளது.

மும்பை: மும்பையில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .45,130 ஆக உள்ளது. அதே நேரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .46,130 ஆக உள்ளது.

ALSO READ: வீட்டில் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு good news: GMS திட்டத்தின் கீழ் பாதுகாப்பு, வருமானம்!!

சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.01 சதவீதம் குறைந்து 1,784.40 அமெரிக்க டாலராக இருந்தது. அதேசமயம், கடந்த 30 நாட்களில், தங்கத்தின் செயல்திறன் 3.83 சதவீதம் குறைந்துள்ளது. இது 71.10 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.

வெள்ளி விலை நிலவரம்

முந்தைய நாளின் விலையுடன் ஒப்பிடும்போது வெள்ளியின் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. திங்களன்று வெள்ளி ஆபரணங்கள் அல்லது நகைகளை வாங்க 10 கிராமுக்கு 690 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.

மெட்ரோ நகரங்களில் வெள்ளி விகிதங்கள்

டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் வெள்ளியின் விலை (Silver Price) ஒரு கிலோகிராமுக்கு 69,000 ரூபாயாக உள்ளது. அதேசமயம், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் 1 கிலோகிராம் வெள்ளியின் விலை ரூ .73,800 ஆகும்.

 வெவ்வேறு கலால் வரி, மாநில வரி மற்றும் நகைக் கடைகளில் வசூலிக்கப்படும் செய்கூலி ஆகியவற்றைப் பொறுத்து தங்கத்தின் விலை ஒவ்வொரு நகரத்திலும் மாறுபடுகிறது.

ALSO READ: வீட்டில் தங்கம் இருக்கா? விரைவில் வரவுள்ளது இது குறித்த அரசின் பெரிய அறிவிப்பு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News