சென்னை: ஜூன் மாதம் தொடங்கியதுமே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் சூடுபிடித்துவிட்டது. மாதத்தில் முதல் நாளான இன்று (ஜூலை 01, செவ்வாய்) தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்தது.
Multi-Commodity Exchange எனப்படும் MCX-இல் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.52 சதவீதம் அதிகரித்து 49,607 ரூபாயாக இருந்தது.
அதேபோல, வெள்ளியின் விலையிலும் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டது. வெள்ளியின் விலை 1.39% உயர்ந்து ஒரு கிலோ 72,900 ரூபாயாக இருந்தது.
சர்வதேச சந்தையில், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவது மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் என பல அழுத்தங்களால், தங்கத்தின் விலை செவ்வாயன்று புதிய உச்சத்தைத் தொட்டது.
உள்நாட்டு சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலையும் அதிகரித்துள்ளன. சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 46,290 ரூபாய் ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 50,490 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கலால் வரி மற்றும் மாநில வரி காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை இந்தியா முழுவதும் வேறுபடுகிறது. கடந்த வாரம் தங்கத்தின் (Gold) விலை 10 கிராமுக்கு ரூ .50,000 க்கும் குறைவாகவே இருந்தது. பிப்ரவரி 1 முதல், தங்கத்தின் விலை சரிவைக் கண்டது. தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்கின்றன.
Also Read | தடுப்பூசி போடுங்க! தங்கம், பைக் எல்லாமே இலவசம்! வாங்க, அள்ளிட்டு போங்க
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR