Family Pension New Rules: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை இல்லையா? அரசின் விளக்கம்

Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 5, 2024, 12:47 PM IST
  • அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதி.
  • குழந்தைகளில் ஓய்வூதியத்தில் யாருக்கு முதல் உரிமை உள்ளது?
  • அரசின் குறிப்பாணையில் கொடுக்கப்பட்ட விளக்கம்.
Family Pension New Rules: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை இல்லையா? அரசின் விளக்கம் title=

Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. இது பற்றிய விவரத்தை அளிக்க ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை ஒரு அலுவலக குறிப்பாணையை (OM) வெளியிட்டுள்ளது. குறிப்பாணையில் உள்ள விவரங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

CSS (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் விதி 50 (15)ஐ மேற்கோள்காட்டிய அலுவலக குறிப்பாணை, ‘ஒரு அரசு ஊழியர் அரசுப் பணியில் சேர்ந்தவுடன், அவர் குடும்பத்தின் விவரங்களை படிவம் 4 இல் அலுவலகத் தலைவரிடம் கொடுக்க வேண்டும். அதில் வாழ்க்கைத் துணை, குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஊனமுற்ற உடன்பிறப்புகள் (குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக இருந்தாலும், இல்லை என்றாலும்) ஆகியோருடன் தொடர்புடைய அனைத்து விவரங்களும் அடங்கும்.  மேலும், அரசுப் பணியாளர், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன், ஓய்வூதியத் தாள்களுடன் மீண்டும் படிவம் 4-ல் குடும்பத்தின் புதுப்பித்த விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இந்த விதி வழங்குகிறது.’ என தெரிவிக்கிறது.

Family Pension: அரசின் குறிப்பாணையில் கொடுக்கப்பட்ட விளக்கம்

அரசு ஊழியர் (Government Employee) ஓய்வு பெற்ற பிறகு குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் இருந்து மகளின் பெயரை நீக்குவது தொடர்பாக விளக்கம் கோரி குறிப்புகள் வந்ததாக அலுவலக குறிப்பாணை தெரிவித்தது. ஓய்வூதியத்திற்கு தகுதி உடையவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் அரசு ஊழியர் / ஓய்வூதியம் பெறுபவர் சமர்ப்பிக்க வேண்டும் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.

"அரசு ஊழியரால் பரிந்துரைக்கப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்போது, ​​அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரது மகள் கருதப்படுகிறார். ஆகையால், குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் மகளின் பெயர் சேர்க்கப்பட்டுதான் இருக்கும். குடும்ப ஓய்வூதியத்திற்கான தகுதி, ஓய்வூதியம் பெறுபவர் / குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு தற்போதுள்ள விதிகளின்படி முடிவு செய்யப்படும்"

மேலும் படிக்க | ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்! இதை செய்யாவிட்டால் கார்ட் நீக்கப்படும்!

Family Pension Rule: அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதி - குழந்தைகளில் ஓய்வூதியத்தில் யாருக்கு முதல் உரிமை உள்ளது?

- ஓய்வூதியம் பெறக்கூடிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் இறந்தால், கணவரை இழந்த விதவை / மனைவியை இழந்த கணவன் ஆகியோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம் பெற இறந்த நபரின் கணவனோ மனைவியோ இல்லாதபோது, அது குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

- 25 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அல்லது திருமணம் ஆகும் வரை, அல்லது,  ரூ. 9,000/- + DA என்ற மாத சம்பளத்திற்கு மேல் ஊழியரின் குழந்தைகள் சம்பாதிக்கத் தொடங்கும்போது, இவற்றில் எது முதலில் நடக்கிறதோ, அது வரை குடும்ப ஓய்வூதியம் இறந்த ஊழியரின் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது. 

- அரசு ஊழியரின் மகன் அல்லது மகள், மனநலம் குன்றியவராகவோ அல்லது உடல் ஊனமுற்றவராகவோ இருந்தால், 25 வயதை எட்டிய பிறகும் அவர் வாழ்வாதாரம் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அவர் தொடர்ந்து குடும்ப ஓய்வூதியம் பெறலாம். 

- நிபந்தனைகளுக்கு உட்பட்டு இது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செலுத்தப்படும்.

- ஓய்வூதிய விதியின்படி, அரசு ஊழியருக்கு ஊனமுற்ற குழந்தை இருந்தால், குழந்தைகளுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் அவர்களுக்குத்தான் முதல் உரிமை கிடைக்கும்.

மேலும் படிக்க | EPS Higher Pension: 97,000 பிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி.... விரைவில் அதிக ஓய்வூதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News