Driving Licence Rules Changed: ஜூன் 1ஆம் தேதி சனிக்கிழமை, அதாவது இன்று முதல் பல புதிய விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. புதிய விதிகளின் படி, ஓட்டுநர் உரிமம் (Driving Licence) பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்படும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) சமீபத்தில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான செயல்பாட்டில் மாற்றங்களை அறிவித்தது. உரிமம் பெறும் செயல்முறையை எளிதாக்குவதும், சிறந்த பயிற்சி பெற்ற ஓட்டுநர்களை ஊக்குவிப்பதும் இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.
ஓட்டுநர் உரிமம் பெற இனி நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்
இனி அந்தந்த மாநில அரசுகளின் கீழ் இயங்கும் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்க அருகில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) வரிசையில் நிற்கத் தேவையில்லை என்பது இன்று முதல் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாகும்.
ஓட்டுநர் தேர்வில் மாற்றங்கள்
புதிய டிரைவிங் லைசென்ஸ் விதிகளின்படி, ஆர்டிஓவுக்குப் பதிலாக தனியார் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் சோதனை (Driving Test) நடத்தும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும். ஆனால், இந்தப் பயிற்சி மையங்கள் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்குத் தேர்வை நடத்த அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
ஓட்டுநர் தேர்வை முடித்த பிறகு, இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த மையங்கள் சான்றிதழ்களை வழங்கும். இந்தச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமத்திற்கு அரசு ஆர்டிஓக்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க | வாடிக்கையாளர்களுக்கு சுமையாகும் கிரெடிட் கார்டு கட்டண உயர்வு இன்று முதல் அமல்!
கட்டணத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
ஜூன் 1 முதல் ஓட்டுநர் உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான கட்டணங்களையும் மையம் திருத்தியுள்ளது. நிரந்தர ஓட்டுநர் உரிமம் அல்லது கற்றல் உரிமம் (Learning Licence) பெற அல்லது இரண்டையும் புதுப்பிக்க ரூ.200 செலுத்த வேண்டும். சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணம் ஒரு விண்ணப்பத்திற்கு 1,000 ரூபாய். விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, இந்த உரிமங்களைப் பெறுவதற்கான செயல்முறை இனி முற்றிலும் டிஜிட்டல் முறையில் இருக்கும்.
அபராதத் தொகை அதிகரித்துள்ளது
செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதத்தில் (Penalty) திருத்தம் செய்ய மத்திய அரசு (Central Government) ஒப்புதல் அளித்துள்ளது. ஜூன் 1 முதல், இந்த போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகள் 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
மைனர் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அபராதம் இன்னும் அதிகமாக இருக்கும். புதிய விதிகளின்படி, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது தவிர, பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வாகனத்தின் பதிவுச் சான்றிதழும் ரத்து செய்யப்படலாம்.
புதிய விதியின்படி, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டி பிடிபட்டால், 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது தவிர, ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகளை குறைக்கும் முயற்சியாகவும், ஒழுங்குமுறைகளை நிலைநாட்டும் விதமாகவும் இவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ