Digital FD Tips: பணம் சம்பாதிப்பதை விட அதை எப்படி சேமிப்பது, சேமிக்கும் பணத்தை எப்படி பாதுகாப்பாக அதிகரிப்பது என்பது மிகப் பெரிய சவாலான விஷயமாக மாறிவிட்டது. வங்கியில் போட்டு வைத்தால் கிடைக்கும் வட்டி வங்கிக்கு வங்கி மாறுகிறது. தனியார் நிதி நிறுவனங்களும், சீட்டு கம்பெனிகளிலும் போடும் பணத்திற்கே உத்தரவாதம் இல்லை என இன்றைய சந்தை நிலைமைகள் கவலைகளை அதிகரித்தாலும், பங்குச்சந்தை இருக்கிறதே என்ற நம்பிக்கை சிலருக்கு ஆறுதலைக் கொடுக்கிறது.
ஆனால் சிலருக்கு நம்பிக்கைக் கொடுக்கும் பங்குச் சந்தை, பலருக்கு பீதியையோ அல்லது அவநம்பிக்கையையோ கொடுக்கிறது.
பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளின் இந்த காலகட்டத்தில், இன்றும் பெரும்பாலான மக்கள் வங்கி வைப்புகளை நம்பியிருக்கிறார்கள். வங்கியில் பணத்தை வைப்புக் கணக்கில் போட்டு வைப்பதைப் போலவே, கார்ப்பரேட் வைப்புத் தொகையும், அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. கார்ப்பரேட் வைப்புக் கணக்கில் டிஜிட்டல் முறையில் முதலீடு செய்தால், கூடுதல் வட்டி பலன்களையும் பெறலாம்.
அந்த வகையில், இன்று பஜாஜ் ஃபைனான்ஸ் வைப்புக் கணக்கைப் பார்க்கலாம். மூத்த குடிமக்களுக்கு பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் எஃப்டிகளுக்கு 42 மாத காலத்திற்கு செய்யும் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி பெறலாம்.
டிஜிட்டல் இந்தியாவுக்கு தற்போது அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன.
மேலும் படிக்க | மாத சம்பளம் வாங்குபவரா நீங்கள்? 2024 பட்ஜெட்டில் வர இருக்கும் முக்கிய மாற்றங்கள்!
இதன் பொருள் நீங்கள் கணக்கு திறக்கலாம், வங்கி பரிவர்த்தனைகள் செய்யலாம், வங்கி FD ஆன்லைனில் செய்யலாம். ஆனால் இதுவரை டிஜிட்டல் மயமாவதற்கு எந்த ஊக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் புத்தாண்டில் டிஜிட்டல் எஃப்டியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இதில் வழக்கமான வைப்புக் கணக்கில் டெபாசிட் செய்வதை விட டிஜிட்டல் முறையில் FD செய்தால், 25 அடிப்படைப் புள்ளிகள் ஊக்கத்தொகையைப் பெறலாம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
பஜாஜ் ஃபின்சர்வின் ஒரு பிரிவான பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், சில நாட்களுக்கு முன்பு டிஜிட்டல் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. அதன் ஆப் மற்றும் இணையதளம் மூலம் FD களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் டெபாசிட்களில் 8.85% வரை வட்டியைப் பெறலாம்.
டிஜிட்டல் எஃப்டிக்கு கிடைக்கும் வட்டியானது, சாதாரண வட்டி விகிதத்துடன் ஒப்பிடும்போது 0.25 சதவீத கூடுதல் வட்டியை வழங்குகிறது. எளிமையான, பாதுகாப்பான மற்றும் கிட்டத்தட்ட உடனடி FD முன்பதிவு மூலம் இந்த அதிக வட்டியைப் பெறலாம் என்று பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் கூறுகிறது.
எவ்வளவு வட்டி கிடைக்கும்?
பஜாஜ் ஃபைனான்ஸ் மூத்த குடிமக்களுக்கு பஜாஜ் ஃபின்சர்வ் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் எஃப்டிகளுக்கு 42 மாத காலத்திற்கு ஆண்டுக்கு 8.85% வரை வட்டி கிடைக்கும். 60 வயதிற்குட்பட்ட டெபாசிட்தாரர்கள் ஆண்டுக்கு 8.60 சதவீதம் வரை வட்டி பெறலாம். இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் ரூ. 5 கோடி வரையிலான புதிய டெபாசிட்டுகளுக்கும், 42 மாத காலத்திற்கு முதிர்ச்சியடைந்த டெபாசிட்களை புதுப்பிப்பதற்கும் பொருந்தும்.
வங்கி FD ஐ விட அதிக வட்டி விகிதம்
வங்கிகள் வழங்கும் வைப்புத்தொகைக்கான வட்டியுடன் ஒப்பிடும்போது கார்ப்பரேட் FDகள் அதிக வட்டியை வழங்குகின்றன. இருப்பினும், கார்ப்பரேட் எஃப்டியில் உள்ள அபாயமும், வங்கி எஃப்டியை விட அதிகமாக உள்ளது. ஆனால் கார்ப்பரேட் எஃப்டி செய்வதற்கு முன் நிறுவனத்தின் மதிப்பீட்டைச் சரிபார்க்கலாம். ஒரு நல்ல மதிப்பீட்டைக் கொண்ட ஒரு நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் நிறைய முதலீடுகளைக் கண்டுள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் டெபாசிட்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய NBFC
செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி ரூ. 54,821 கோடி டெபாசிட் முன்பதிவுகள் மற்றும் 1.4 மில்லியன் டெபாசிட்களுடன் பஜாஜ் ஃபைனான்ஸ் நாட்டின் மிகப்பெரிய டெபாசிட் எடுத்து NBFC ஆக உருவெடுத்துள்ளது. பஜாஜ் ஃபைனான்ஸின் நிலையான வைப்புத் திட்டம் CRISIL இன் AAA/ஸ்டேபிள் மற்றும் ICRA இன் AAA (நிலையான) ஆகியவற்றுடன் மிக உயர்ந்த ஸ்திரத்தன்மை மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களில் ஒன்றாகும்.
(பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான அறிவை அடிப்படையாகக் கொண்டவை. கட்டுரை தகவலுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஜீ தமிழ் செய்திகள் உங்களுக்கு எந்தவிதமான முதலீட்டு ஆலோசனைகளையும் வழங்கவில்லை. முதலீடு செய்வதற்கு முன் பொருள் நிபுணரிடம் ஆலோசனை பெற பரிந்துரைக்கப்படுகிறது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ