மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க அமேசான்-மைக்ரோசாப்ட்-சிபிஐ ரெய்டு

Call Centre Scam Prevention: போலி கால்செண்டர் மோசடி தொடர்பான அதிரடி சோதனையால், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மோசடிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 21, 2023, 07:22 AM IST
  • இந்தியாவில் போலி கால் செண்டர்கள்
  • நாடு முழுவதும் சிபிஐ ரெய்டு
  • அமேசானுடன் கை கோர்த்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க அமேசான்-மைக்ரோசாப்ட்-சிபிஐ ரெய்டு title=

மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர் ஆதரவைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் இந்தியாவில் உள்ள சட்டவிரோத கால் சென்டர்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் அதிரடி சோதனைகளை அக்டோபர் 19 வியாழன் அன்று சிபிஐ மேற்கொண்டது. 

இந்தியாவில் உள்ள பயனர்களை ஆள்மாறாட்டம் மோசடிகளில் இருந்து பாதுகாக்க அமேசான், மைக்ரோசாப்ட் குழு ஒன்று சேர்ந்து, நிறுவனங்கள் தொழில்துறை ஒத்துழைப்ப்பு மிகவும் ஆக்கப்பூர்வமானது என்றும், மோசடிக்காரர்களை அடையாளம் காண்பது, இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் கவனத்தைப் பெறுகிறது. இதுபோன்ற பாதுகாப்பு விஷயத்தில் அமேசானும், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இணைந்து ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கின்றன.

இந்தியாவில் ஆள்மாறாட்ட மோசடிகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்க மைக்ரோசாப்ட் உடன் இணைந்துள்ளதாக அமேசான் வெள்ளிக்கிழமை அறிவித்தது. மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் மற்றும் சென்ட்ரல் பீரோ இன்வெஸ்டிகேஷன் (சிபிஐ) உடன் இணைந்து, தொழில்நுட்ப ஆதரவு மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
சட்டவிரோத கால் செண்டர்கள் மையங்கள் முதன்மையாக அமெரிக்காவைச் சார்ந்த 2,000 அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்களை பாதித்துள்ளன, அதெபோல ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும் சட்டவிரோத கால் செண்டர்கள் உள்ளன.

மேலும் படிக்க | பங்குச்சந்தையின் புதிய ரிகார்ட் பிரேக்! இதுவரை இல்லாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை
 
இணைய குற்றவாளிகள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்படுவதால், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கூட்டு வழக்குத் தொடர்வதற்கு, அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.  

"மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இது போன்ற செயலூக்கக் கூட்டாண்மைகள்,  மோசடிகளில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அமேசான் நிறுவனத்தின் வணிக நடத்தை & நெறிமுறைகளின் துணைத் தலைவரும் அசோசியேட் ஜெனரல் ஆலோசகருமான கேத்தி ஷீஹன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

"இந்திய சட்ட அமலாக்க அமைப்பு மற்றும் பாதிக்கப்பட்ட நாடுகளின் அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்" என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆள்மாறாட்டம் செய்பவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும், ஆள்மாறாட்ட மோசடிகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான தொடர் முயற்சிகளின் மூலம், 2022 ஆம் ஆண்டில் 20,000 க்கும் மேற்பட்ட ஃபிஷிங் வலைத்தளங்கள் மற்றும் 10,000 ஃபோன் எண்களை ஆள்மாறாட்டம் செய்யும் திட்டங்களின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துவதைத் தொடங்கியுள்ளது என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த அதிரடி சோதனையால், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான மோசடிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | மோசடியில் சிக்காமல் இருக்க உதவும் கிரெடிட்-டெபிட் கார்டுகளின் CVV/CVC எண்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News