Budget 2025: 2025 புத்தாண்டு தொடங்கியவுடன், பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இதற்கான ஆயத்தபணிகள் தொடங்கிவிட்டன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டுக்கு முன்னர் பல துறைகளின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை பெற்று வருகிறார்.
Nirmala Sithataman: விவசாய பிரதிநிதிகளை சந்தித்த நிதி அமைச்சர்
பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சர் (Finance Minister), விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பங்குதாரர்களுடன் சனிக்கிழமை ஒரு சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, மலிவான நீண்ட கால கடன்களை வழங்கவும், குறைந்த வரிகளை அமல்படுத்தவும், பிஎம் கிசான் (PM Kisan) வருமான ஆதரவை இரட்டிப்பாக்கவும் விவசாயிகள் அரசாங்கத்தை வலியுறுத்தயுள்ளனர். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், நிதி நிவாரணம், சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் மூலோபாய முதலீடு போன்ற விவசாயத் துறையின் பல சவால்களுக்கான தீர்வுகளும் பரிசீலிக்கப்பட்டன.
Union Budget 2025: ஜிஎஸ்டி விலக்குக்கான கோரிக்கை
- நிதி அமைச்சருடன் நடந்த கூட்டத்தில், பாரத் கிரிஷக் சமாஜ் தலைவர் அஜய் வீர் ஜாகர் விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகளின் நலனை அதிகரிக்க இலக்கு தலையீடுகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
- விவசாயக் கடனுக்கான வட்டி விகிதத்தை ஒரு சதவீதம் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- பிஎம்-கிசான் தவணையை ஆண்டுக்கு ரூ.6,000 -லிருந்து ரூ.12,000 ஆக உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
- இந்த நிதியை உயர்த்துவதற்கான கோரிக்கை 2024 பட்ஜெட்டிலும் வைக்கப்பட்டது குறிப்பிடத்தகது.
- வரிவிதிப்பு சீர்திருத்த திட்டங்களின் கீழ் விவசாய இயந்திரங்கள், உரங்கள், விதைகள் மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
- PHD சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி பூச்சிக்கொல்லிகள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
- மேல் கூறியவை இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
இந்தக் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன
தேசிய விவசாய உற்பத்தியை அதிகரிக்க, பருப்பு, சோயாபீன் மற்றும் கடுகு போன்ற குறிப்பிட்ட பயிர்களில் கவனம் செலுத்த, எட்டு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 1,000 கோடி முதலீட்டு உத்தியை ஜாகர் முன்மொழிந்தார். பாரதிய கிசான் யூனியன் (பிகேயு) செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர மாலிக் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) பொறிமுறையை விரிவான மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரினார். நில வாடகை, விவசாயக் கூலி, அறுவடைக்குப் பிந்தைய செலவுகள் ஆகியவை எம்எஸ்பி கணக்கீட்டில் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதி மற்றும் வேளாண் அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, இன்னும் பல காரணிகளையும் கருத்தில் கொண்டு, சீர்திருத்தங்களுக்கான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | PF உறுப்பினர்கள் டிசம்பர் 15 -க்குள் இதை செய்ய வேண்டும்: தவறினால் பெரும் நஷ்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ