Budget 2024: காப்பீட்டுத் துறையில் இந்த குட் நியூஸ் நிச்சயம் இருக்கும்.... நிபுணர்கள் கருத்து

Budget 2024: பல துறைகளும் நிதி அமைச்சரிடம் பல வித எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றில் ஆயுள் காப்பீட்டுத் துறையும் ஒன்று.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2024, 02:25 PM IST
  • வரவிருக்கும் பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும்.
  • இருப்பினும், இன்ஃப்ரா கேபெக்ஸ் மற்றும் சுயசார்பு கருப்பொருள்களின் தொடர்ச்சியை காப்பீட்டுத் துறை எதிர்பார்க்கிறது.
  • FY25 இல் 20-25% ஆண்டு அடிப்படையிலான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
Budget 2024: காப்பீட்டுத் துறையில் இந்த குட் நியூஸ் நிச்சயம் இருக்கும்.... நிபுணர்கள் கருத்து  title=

Budget 2024: பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)

பல துறைகளும் நிதி அமைச்சரிடம் (Finance Minister) பல வித எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. அவற்றில் ஆயுள் காப்பீட்டுத் துறையும் ஒன்று. ஆயுள் காப்பீட்டுத் துறையானது (Life Insurance Sector), தற்போதுள்ள 80C விதிகளைத் தவிர்த்து, காலக் காப்பீட்டு வகைக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, குறிப்பாக ஆயுள் காப்பீட்டிற்கு (Life Insurance), தனித்துவமான வரி விலக்கு வரம்பை எதிர்பார்க்கிறது.

வரிவிதிப்பு 

"இது தனிநபர்களுக்கு ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளில் முதலீடு செய்வதற்கும், நீண்டகால பாதுகாப்பு உணர்வை மேம்படுத்துவதற்கும் ஊக்கமளிக்கும். ஓய்வூதியம் (Pension) மற்றும் வருடாந்திர திட்டங்களைச் (Annuity) சுற்றியுள்ள வரிவிதிப்பு (Taxation) கட்டமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. பிரிவு 80CCD (1B) -இன் கீழ் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பொருந்தும் ரூ. 50,000 வரி விலக்கில், காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் ஓய்வூதியம் மற்றும் வருடாந்திரத் திட்டங்களையும் உள்ளடக்கினால், ஓய்வூதியத் திட்டமிடல் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாறும். இதன் மூலம் தனிநபர்கள் காப்பீட்டு அடிப்படையிலான ஓய்வூதியம் மற்றும் வருடாந்திர திட்டங்களைத் தேர்வுசெய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த மாற்றங்கள், தொழில்துறையில் ஆரோக்கியமான போட்டியை வளர்க்கும். மேலும் சமமான களத்தையும் உருவாக்கும்," என பிரமெரிகா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் எம்.டி & சி.இ.ஓ., பங்கஜ் குப்தா கூறினார்.

வரவிருக்கும் பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக இருந்தாலும், இன்ஃப்ரா கேபெக்ஸ் மற்றும் சுயசார்பு கருப்பொருள்களின் தொடர்ச்சியை காப்பீட்டுத் துறை எதிர்பார்க்கிறது என குப்தா கூறினார்.

மேலும் படிக்க | Income Tax: உறவுகளுக்குள் பண பரிமாற்றம் செய்தால் வருமான வரி நோட்டீஸ் வருமா

"பொருளாதாரத்தை இன்னும் முழுமையாகப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் 'மேக் இன் இந்தியா' முயற்சிக்கான நீடித்த அர்ப்பணிப்பு, மூலதனச் செலவினங்களை அதிகரிக்கவும், நீண்ட கால உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் உதவும். மொத்த செலவினங்களின் ஒரு பகுதியாக, 2020 நிதியாண்டில் கேபெக்ஸ் 12% ஆக உயர்ந்துள்ளது. FY24 இல் இது 22% ஆக இருந்தது. தனியார் கேபெக்ஸ் மீட்பு இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அரசாங்கம் அதன் கவனத்தை மூலதன செலவில் (Capital Expenditure) தொடர்ந்து செலுத்த வாய்ப்புள்ளது. FY25 இல் 20-25% ஆண்டு அடிப்படையிலான வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று குப்தா மேலும் கூறினார்.

"முக்கியமாக இது தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் என்பதால், கிராமப்புற/வேளாண்மைத் திட்டங்களில் சில நலத்திட்டங்களை அறிவித்து மத்திய அரசு (Central Government) அடித்தள மக்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தி அவர்களது ஆதரவை பெற முயற்சிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த பட்ஜெட்  பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்பு உந்துதலில் தேவையானதை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.,” என்று ஃபியூச்சர் ஜெனரலி இந்தியா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் தலைமை முதலீட்டு அதிகாரி நிரஜ் குமார் கூறினார்.

கூடுதல் வரிச் சலுகைகள்

யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ஷரத் மாத்தூர் கூறுகையில், "2047க்குள் அனைவருக்கும் காப்பீடு'  (‘Insurance for All by 2047') என்ற தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற, பொதுமக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதும், குடிமக்கள் காப்பீட்டை மேம்படுத்துவதும் முக்கியமானதாக இருக்கும். IRDAI இன் Bima Vahak, Bima Vistaar மற்றும் Bima Sugam முன்முயற்சிகள் உண்மையில் மிகச் சிறந்தவை. இவை காப்பீட்டை உள்ளடக்கிய நோக்கங்களுக்கு ஒரு பெரிய நிரப்புதலை வழங்குவதாகக் கூறப்படுகின்றன. அதே வேளையில், காப்பீட்டுத் திட்டங்களை வாங்குவதில் கூடுதல் வரிச் சலுகைகளை வழங்குவது நோக்கத்தை அடைவதற்கு பெரிதும் துணைபுரியும்." என்று தெரிவித்தார்.

பாரத்சூரின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனுஜ் பரேக், ‘கிட்டத்தட்ட 90 கோடி இந்தியர்கள் இன்று மருத்துவக் காப்பீடு (Medical Insurance) இல்லாமல் உள்ளனர். வரிச் சலுகைகளை வழங்குவது (Tax Exemption) அல்லது காப்பீட்டுச் செலவுக்கு மானியம் வழங்குவது, நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கில் பெரிதும் உதவியாக இருக்கும்.’ என்றார். 

மேலும் படிக்க | Budget 2024: NPS முதலீடுகளுக்கு கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்படலாம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News