UPI New Feature: UPI பயனரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. யுபிஐ பயன்பாட்டு முறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. UPI -இல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இதில் அதிகரிக்கபட்டுள்ள வசதிகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒரு வீட்டில் 5 பேர் இருந்து, அந்த 5 நபர்களும் UPI -ஐ பயன்படுத்த வேண்டும் என்றால், ஒவ்வொருவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரின் தனிப்பட்ட மொபைல் எண்ணும் அவர்களது வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் அவரவரது UPI மூலம் பணம் செலுத்த முடியும். ஆனால் இப்போது பயனர்கள் கணக்கு இல்லாமலும் UPI மூலம் பணத்தை செலுத்த முடியும்.
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். உங்கள் வீட்டில் 5 பேர் இருந்தால், அந்த வீட்டின் தலைவர் தனது UPI கணக்கில் வீட்டிலிருந்து 5 பேரை சேர்க்கலாம். இந்த அம்சத்திற்கு UPI வட்டம் அதாவது UPI Circle என்று பெயரிடப்பட்டுள்ளது. இது NPCI அதாவது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payment Corporation of India) மூலம் தொடங்கப்பட்டது. இந்த அம்சத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் அறிவித்தது.
UPI Circle அம்சம் என்றால் என்ன?
UPI சர்கிள் என்பது என்பது ஒரு டெலிகேட் கட்டண அம்சமாகும். இது முதன்மை அம்சத்துடன் கட்டண இணைப்பு வசதியை வழங்குகிறது. அதன் உதவியுடன், பகுதியளவு அல்லது முழு கட்டணத்தை செலுத்த முடியும். அதாவது பெற்றோர்கள் தங்கள் UPI கணக்கை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
UPI Circle அம்சம் எவ்வாறு செயல்படும்?
- இந்த அம்சம் முன்மை மற்றும் இரண்டாம் நிலை என இரண்டு வகையான பயனர்களைக் கொண்டுள்ளது.
- சொந்த கணக்குகளைக் கொண்டவர்கள் முதன்மைப் பயனர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
- இதில் அவர்கள் இரண்டாம் நிலைப் பயனர்களைச் சேர்க்கலாம்.
- இதில் முதன்மைப் பயனர்கள் சில வரம்புகளையும் விதிக்கலாம்.
- இதில், இரண்டாம் நிலை பயனர்களுக்கு முழு கட்டண அணுகலையும் வழங்க முடியும்.
- அல்லது இரண்டாம் நிலை பயனர்களுக்கு சில வரையறுக்கப்பட்ட கட்டண விருப்பங்கள் மட்டும் கிடைக்கச் செய்யலாம்.
மேலும் படிக்க | ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு ஜாக்பாட்: காப்பீட்டு தொகையை இரட்டிப்பாக்கும் அரசு
Full delegation: முழுமையான அணுகல்
இதில், முதன்மைப் பயனர், இரண்டாம் நிலைப் பயனர்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட செலவின வரம்பை எந்தவித ஒப்புதலும் இல்லாமல் செலவிட அனுமதிக்கலாம்.
Partial delegation: பகுதியளவு அணுகல்
இதில், இரண்டாம் நிலைப் பயனர்கள் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். ஆனால், அவர்கள் பணம் செலுத்துவதற்கு முன், முதன்மைப் பயனர்கள் அங்கீகாரம் அளித்து கட்டணம் செலுத்த UPI PIN -ஐ உள்ளிட வேண்டும்.
UPI Circle: இந்த அம்சத்தின் விதிகள் என்ன?
- இரண்டாம் நிலைப் பயனர்கள் கட்டணம் செலுத்த செயலியின் பாஸ்கோட் அல்லது பயோமெட்ரிக் விவரங்களை வழங்க வேண்டும்.
- முதன்மைப் பயனர் தனது கணக்கில் அதிகபட்சமாக 5 நபர்களை சேர்க்கலாம்.
- UPI சர்கிளில் மாதச் செலவு வரம்பு ரூ.15,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- UPI சர்கிளில் ஒரு நாளின் அதிகபட்சச் செலவு ரூ. 5000 ஆக உள்ளது.
- இந்த UPI வரம்பு பகுதியளவு அணுகலுக்குப் பொருந்தும்.
- UPI சர்கிளின் கூலிங் காலம் 24 மணிநேரம் ஆகும்.
- முதன்மை பயனர் விரும்பினால், அவர் இரண்டாம் நிலை பயனர்களின் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் கண்காணிக்க முடியும், அவர்கள் செய்யும் கட்டணங்களையும் நிறுத்த முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ