EPS Pension Rule: ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி... புதிய விதிகளால் நிவாரணம்

EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் ஓய்வூதியம் பெறுவோர் அடுத்த ஆண்டு முதல் எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்து வேண்டுமானாலும், தங்கள் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 12, 2024, 01:10 PM IST
  • மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறை.
  • புதிய அமைப்பு எவ்வாறு செயல்படும்?
  • புதிய மாற்றங்களால் ஏற்படும் நன்மைகள்.
EPS Pension Rule: ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி... புதிய விதிகளால் நிவாரணம் title=

EPS Pension: ஒழுங்கமைக்கப்பட்ட தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகு, இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) கிடைக்கும் EPFO ​​(ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) ஓய்வூதியத் திட்டமான EPS இலிருந்து ஓய்வூதியத்தைப் பெறுவது இனி மிகவும் எளிதாக இருக்கும். ஏனெனில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் ஓய்வூதியம் பெறுவோர் அடுத்த ஆண்டு முதல் எந்த வங்கி அல்லது அதன் கிளையிலிருந்து வேண்டுமானாலும், தங்கள் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த புதிய மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாற்றம் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும்.

EPS: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 

ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995 தொடர்பாக, மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கட்டண முறையிலிருந்து (CPPS)  மத்திய அரசுக்கு ஒரு முன்மொழிவு கிடைத்தது. இந்த முன்மொழிவு, எந்த வங்கியின் எந்த கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான செயல்முறையை செயல்படுத்துவது தொடர்பாக இருந்தது. இந்த முன்மொழிவுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய முறை ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும்

இபிஎஸ் ஓய்வூதியம் (EPS Pension) பெறுவோர் ஜனவரி 1, 2025 முதல் இந்தியாவில் உள்ள எந்தவொரு வங்கி அல்லது கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தைத் திரும்பப் பெற இந்த புதிய முறை உதவும். தனியார் துறை ஊழியர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகின்றது. இது அவர்களது பல பணிகளை எளிதாக்கும்.

78 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு நிவாரணம்

அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் இந்த புதிய முறையின் மூலம் 78 லட்சத்துக்கும் அதிகமான இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் (EPS Pensioners) பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO செயல்முறைகளின் நவீனமயமாக்கலில் பல புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றது. CPPS எனப்படும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியக் கொடுப்பனவு முறைக்கான ஒப்புதல்  EPFO -வின் முயற்சிகளில் ஒரு மைல்கல் என்று தொழிலாளர் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

மேலும் படிக்க | டிஏ ஹைக் மட்டுமல்ல... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 5 ஜாக்பாட் அறிவிப்புகள்: முழு லிஸ்ட் இதோ

EPS Pension: புதிய அமைப்பு எவ்வாறு செயல்படும்?

- EPS -இன் புதிய முறை அமலுக்கு வந்த பிறகு, ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறும் காலம் தொடங்கும் போது எந்த ஒரு சரிபார்ப்புக்காகவும், வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

- ஓய்வூதியம் வழங்கப்பட்டவுடன், உடனடியாக அது கணக்கில் சென்றுவிடும்.

- புதிய முறை அமலுக்கு வந்தவுடன், ஓய்வூதிய விநியோக செலவும் குறையும் என்று EPFO ​​கருதுகிறது.

CPPS: மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறை

சென்ட்ரலைஸ்டு பென்ஷன் பேமென்ட் சிஸ்டம் (Centralised Pension Payment System) என்பது மத்திய அரசின் ஒரு முன்முயற்சி. இந்த முஇன்முயற்சியின் கீழ், தேசிய அளவில் ஒரு அமைப்பு தொடங்கப்படும். இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள எந்த வங்கி அல்லது கிளை மூலமாகவும் ஓய்வூதியம் பெறும் வசதியை வழங்குகிறது. இந்த வசதி ஜனவரி 1, 2025 முதல் தொடங்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புதிய மாற்றங்களால் ஏற்படும் நன்மைகள்:

- Pension Payment Order: சமீபத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், PPO மாற்றப்பட வேண்டிய அவசியம் இருக்காது. புதிய முறை நடைமுறைக்கு வந்த பிறகு, ஓய்வூதியம் பெறுவோர், இடமாற்றம் செய்யும்போது அல்லது வங்கிகளை மாற்றும்போது PPO (Pension Payment Order) எண்ணை மாற்ற வேண்டியதில்லை. 

(PPO என்பது பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) கீழ் ஓய்வூதியதாரருக்கும் ஒதுக்கப்படும் தனித்துவமான 12 இலக்கக் குறியீடாகும்.)

- இதனால் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும். 

- அவர்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு மாறினாலோ அல்லது வங்கிகளை மாற்றினாலோ இனி PPO ஐ மாற்ற வேண்டியதில்லை.

- ஓய்வூதியதாரர்களின் கணக்கில் ஓய்வூதியம் உடனடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் படிக்க | ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச சுகாதார பாதுகாப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News