அடல் பென்ஷன் யோஜனா: மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அதில் நிதி உதவி திட்டங்களும் அடங்கும். இதனிடையே கோடிக்கணக்கான மக்களுக்கு தற்போது மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. அந்தவகையில் அரசு ஒரு புதிய திட்டத்துடன் வந்துள்ளது, இதன் மூலம் உங்கள் கணக்கில் மாதம் 5000 ரூபாய் அனுபப்படும். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த பணம் உங்களின் முதுமை காலம் வரை உங்கள் கணக்கில் வந்து கொண்டே இருக்கும். வாருங்கள் மோடி அரசின் இந்த சிறப்புத் திட்டத்தைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
பணம் நேரடியாக கணக்கில் வந்து சேரும்
அடல் பென்ஷன் யோஜனாவில் அரசாங்கத்திடமிருந்து இந்த வசதியைப் பெறுவீர்கள். இது உங்கள் முதுமைக்காக இந்திய அரசால் நடத்தப்படும் திட்டமாகும். இந்தத் திட்டத்தில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம், இந்தப் பணம் உங்கள் கணக்கில் நேரடியாக வந்து சேரும்.
அடல் பென்ஷன் யோஜனா என்றால் என்ன?
அடல் பென்ஷன் யோஜனா உங்கள் முதுமை காலத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்திய அரசால் நடத்தப்படுகிறது. முதுமை காலத்தில் மக்கள் எந்த பிரச்சனையும் சந்திக்காமல் இருக்கவும், உங்கள் முதுமை காலத்திரக்கான பணத்தை சேமிக்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில், நீங்கள் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்யலாம் மற்றும் ஓய்வூதிய நிதியை டெபாசிட் செய்யலாம்.
யார் முதலீடு செய்ய முடியும்
இந்தத் திட்டத்தில், 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். 60 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கும். இதில் 20 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்.
5000 எப்போது கிடைக்கும்
இந்தத் திட்டத்தில் நீங்கள் 60 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1454 டெபாசிட் செய்ய வேண்டும், மேலும் 60 ஆண்டுகள் முடிந்த பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 முதல் 5000 வரை பெறுவீர்கள்.
கணக்கை எங்கு திறப்பது
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, அருகிலுள்ள வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். மேலும் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யலாம்.
மேலும் படிக்க | ஒடிசாவில் ’தங்க புதையல்’..! லித்தியத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஜாக்பாட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ