Bank Holidays July 2023: ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், அலர்ட் மக்களே!!

Bank Holidays in July 2023: இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை காலண்டரின்படி, இந்த மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2023, 01:39 PM IST
  • ஜூலை மாத வங்கி விடுமுறை பட்டியலை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கி தான் இந்தியாவில் வங்கி விடுமுறை நாட்களை முடிவு செய்கிறது.
  • ஜூலை மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.
Bank Holidays July 2023: ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், அலர்ட் மக்களே!! title=

ஜூலை 2023 இல் வங்கி விடுமுறைகள்: இன்னும் இரண்டு நாட்களில் ஜூலை மாதம் பிறக்கவுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள வங்கிகளில் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஜூலை மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அத்தியாவசிய நாட்களின் காரணமாக ஜூலை மாதத்தில் பெரும்பாலான பொது மற்றும் தனியார் வணிக வங்கிகளின் கிளைகள் கூடுதலாக எட்டு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். 

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை காலண்டரின்படி, இந்த மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனினும் இது வெவ்வேறு மாநிலங்களுக்கு மாறுபட்டிருக்கும்.

வங்கி விடுமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மூன்று வகைகளாகப் பிரிக்கிறது: நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் சட்டத்தின் (Negotiable Instruments Act) கீழ் வரும் விடுமுறைகள், நிகழ்நேர மொத்த தீர்வு (real-time gross settlement) விடுமுறைகள் மற்றும் வங்கிகளின் கணக்குகளை மூடுதல் (Banks’ Closing of Accounts).

ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடுகிறது. இதில் தேசிய விடுமுறைகள், அரசு விடுமுறைகள் மற்றும் மத விடுமுறைகள் ஆகியவை அடங்கும்.  இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதல்களின்படி, அந்தந்த மாநிலங்களை பொறுத்து சில பிராந்திய விடுமுறைகளுடன் அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும்.  பிராந்திய விடுமுறைகள் அந்தந்த மாநில அரசாங்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.  ரிசர்வ் வங்கியின் வங்கி விடுமுறை அட்டவணை ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, தனிப்பட்ட வங்கிகளின் இணையதளங்களிலும் வங்கி விடுமுறை நாட்களின் அட்டவணையை நீங்கள் பார்த்து கொள்ளலாம்.  இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையின்படி, ஜூலை மாதத்தில் மொத்தம் 15 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவரா? அக்டோபர் வரை கவலையில்லை

ஜூலை 2023 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்:

- 2 ஜூலை: ஞாயிற்றுக்கிழமை 
- 5 ஜுலை: குரு ஹரகோபிந்த் ஜி கி ஜெயந்தி
- 6 ஜூலை: MHIP டே காரணமாக மிசோராமில் விடுமுறை
- 8 ஜூலை: இரண்டாவது சனிக்கிழமை
 - 9 ஜூலை: ஞாயிற்றுக்கிழமை 
- 11 ஜூலை: கேர் பூஜைக்காக திரிபுராவில் விடுமுறை
- 13 ஜூலை: பானு ஜெயந்திக்காக சிக்கிமில் விடுமுறை
- 16 ஜூலை: ஞாயிற்றுக்கிழமை 
- 17 ஜூலை: திரோத் சிங் தினத்துக்காக மேகாலயாவில் விடுமுறை
- 21 ஜூலை: Drukpa Tshe-zi -க்காக சிக்கிமில் விடுமுறை
- 22 ஜூலை: நான்காவது சனிக்கிழமை
- 23 ஜூலை:  ஞாயிற்றுக்கிழமை 
- 29 ஜூலை: முகரம் (பல மாநிலங்களில்) விடுமுறை
- 30 ஜூலை: ஞாயிற்றுக்கிழமை 
- 31 ஜூலை: ஷாஹாதத் தினத்துக்காக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் விடுமுறை

இருப்பினும், ரிசர்வ் வங்கியானது, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக விடுமுறை அளிக்கப்படாது என்றும், விடுமுறைகள் அனைத்து மாநிலங்களிலும், பிராந்தியங்களிலும் வேறுபடும் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, நீங்கள் இருக்கும் மாநிலத்தின் வங்கிகள் எந்தெந்த நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்பதை கருத்தில்கொண்டு அதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிடுவது நல்லது. வங்கிகளுக்கு விடுமுறை இருந்தாலும், ஏடிஎம்கள், பண டெபாசிட்கள், ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கும்.  

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்.. 2 நாட்களுக்கு பிறகு இலவச ரேஷன் கிடைக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News