Bank Holidays: நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ!!

தீபாவளி, குரு நானக் ஜெயந்தி போன்ற முக்கிய பண்டிகைகளுடன் நவம்பர் மாதம் இந்தியாவில் பண்டிகை மாதமாக இருக்கப்போகிறது.

Last Updated : Oct 30, 2020, 08:47 AM IST
  • நவம்பர் மாதத்தில் தீபாவளி, குரு நானக் ஜெயந்தி போன்ற முக்கிய பண்டிகைகள்.
  • நவம்பர் மாதம் இந்தியாவில் பண்டிகை மாதமாக இருக்கப்போகிறது.
  • இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் நவம்பர் மாதத்தில் எட்டு நாட்கள் மூடப்பட்டிருக்கும்.
Bank Holidays: நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ!! title=

நவம்பர் 2020 இல் வங்கி விடுமுறைகள்:

இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் பொது விடுமுறை நாட்களில் மூடப்பட்கின்றன. தீபாவளி, குரு நானக் ஜெயந்தி போன்ற முக்கிய பண்டிகைகளுடன் நவம்பர் மாதம் இந்தியாவில் பண்டிகை மாதமாக இருக்கப்போகிறது. இதன் காரணமாக இந்த மாதத்தில் பொது விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் (Banks) நவம்பர் மாதத்தில் எட்டு நாட்கள் மூடப்பட்டிருக்கும். நவம்பர் 2020 இல் வங்கி விடுமுறை நாட்களில் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளும் இரண்டு சனிக்கிழமைகளும் அடங்கும்.

குறிப்பிடத்தக்க வகையில், நாட்டில் வங்கி விடுமுறைகளும் அவை அமைந்துள்ள மாநில விடுமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை.

நவம்பர் 2020 இல் வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சில சமயம் நாம் வங்கிகளின் விடுமுறை நாட்களை மனதில் வைத்து பல வேலைகளை திட்டமிடவேண்டியுள்ளது. பல நேரங்களில், நாம் வெகு நாட்களுக்கு முன்னரே ஒரு பணிக்கான திட்டங்களைப் போட்டு வைத்து, அதற்காக வங்கிக்கு செல்ல நினைக்கும்போது அன்று வங்கி விடுமுறை என்பது நினைவில் வருவது உண்டு.

ALSO READ:தமிழ அரசு அதிரடி!! மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அரசாணை வெளியீடு

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தொடர்பான பணிகளைத் திட்டமிடவும், சிரமங்களைத் தவிர்க்கவும் இந்த பட்டியல் உதவியாக இருக்கும்:

நவம்பர் 1 - ஞாயிறு

நவம்பர் 8 - ஞாயிறு

நவம்பர் 14 - இரண்டாவது சனி / தீபாவளி

நவம்பர் 15 - ஞாயிறு

நவம்பர் 22 - ஞாயிறு

நவம்பர் 28 - நான்காவது சனி

நவம்பர் 29 - ஞாயிறு

நவம்பர் 30 - குரு நானக் ஜெயந்தி

குறிப்பு: மேலே உள்ள விடுமுறை பட்டியல் மாற்றத்திற்கு உட்பட்டது

வங்கிகள் மூடப்பட்ட நாட்களில் கூட மக்கள் ஆன்லைன் / இணைய வங்கி வசதிகளைப் பயன்படுத்தலாம்.

ALSO READ: இனி ரயிலில் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க 'My Friend' திட்டம் உதவும்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News