Sani Peyarchi & Ezharai Nattu Sani: ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். சனிப்பெயர்ச்சி, சில ராசிகளுக்கு ஏழரை சனியையும், அஷ்டம சனியையும் கொடுக்கிறது.
சனி பகவான் சஞ்சரிக்கும் ராசிக்கும், ஏழரை நாட்டு சனி காலத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. அந்த வகையில் சனி பெயர்ச்சி தான் எழரை நாட்டு சனி காலத்தை தீர்மானிக்கின்றன. இந்நிலையில், 2025 சனி பெயர்ச்சி முதல் 2034 சனி பெயர்ச்சி வரை, யாருக்கெல்லாம் ஏழரை நாட்டு சனி பாதிப்பு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுக்கும் சனீஸ்வரன், மிகவும் மெதுவாக நகரும் கிரகம். ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழ்கிறது. அதன் அடிப்படையில் தான் ஏழரை நாட்டு சனி காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
சனி பெயர்ச்சி சமயத்தில், சனீஸ்வரன் சஞ்சரிக்கும் ராசிக்கும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள ராசிகளுக்கும் ஏழரைச் சனி நடக்கிறது. அந்த வகையில் 2025 முதல் 2036 ஆம் ஆண்டு வரை, எந்தெந்த ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி காலம் நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஏழரை நாட்டு சனி: தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ளதன் காரணமாக, கும்ப ராசிக்கு ஜென்ம சனியும், மகர ராசிக்கு பாத சனியும், மீன ராசிக்கு விரய சனியும் நடக்கிறது. இந்நிலையில், 2025 சனி பெயர்ச்சி முதல் 2034 சனி பெயர்ச்சி வரை, யாருக்கெல்லாம் ஏழரை நாட்டு சனி பாதிப்பு இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
2025 சனி பெயர்ச்சி: மார்ச் மாதம் 29ஆம் தேதி, கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக மீன ராசிக்கு ஜென்ம சினியும், மேஷ ராசிக்கு விரய சனியும், கும்ப ராசிக்கு பாத சனியும் நடக்கும்.
2027 சனி பெயர்ச்சி: 2027 ஜூன் மூன்றாம் தேதி மேஷ ராசியில் சனி பெயர்ச்சி நடப்பதால், மேஷ ராசிக்கு ஜென்ம சனியும், மீன ராசிக்கு பாத சனியும், ரிஷப ராசிக்கு விரய சனிகாலமும் நடக்கும்.
2029 சனி பெயர்ச்சி: 2029 ஆகஸ்ட் 8ஆம் தேதி, சனி பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிலையில், ரிஷப ராசிக்கு ஜென்ம சனியும், மேஷ ராசிக்கு பாத சனியும், மிதுன ராசிக்கு விரைய சனிக்காலமும் நடக்கும்.
2032 சனிப்பெயர்ச்சி: 2032 மே மாதம், 31ஆம் தேதி, சனிபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இதனால் மிதுன ராசிக்கு ஜென்ம சனியும், ரிஷப ராசிக்கு விரய சனியும், கடக ராசிக்கு பாத சனி காலமும் நடக்கும்.
2034 சனி பெயர்ச்சி: 2034 ஜூலை 13ஆம் தேதி, மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார். இதனால் கடக ராசிக்கு ஜென்ம சனியும், மிதுன ராசிக்கு பாத சனியும், சிம்ம ராசிக்கு விரய சனிகாலமும் தொடங்கும்.
ஜோதிட பரிகாரங்கள்: ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது எப்போதுமே சனி பகவான் மனதை குளிர்விக்கும். அதேபோன்று சனி சாலீசா பாராயணம் செய்வதும் பலன் தரும். கடின உழைப்பாளிகளையும் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். விக்னங்களை தீர்க்கும் விநாயகர், பக்வான ஹனுமானை வணங்குவதும் பலன் தரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.