வருமான வரித்துறை தற்போது ரிட்டன் தாக்கல் செய்வதற்கான வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலமாக வருமான வரி செலுத்தும் பிரிவில் வராத நபர்களும் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி தனிநபர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் வருமானம் வரிக்குட்பட்ட வரம்பில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி அவர்கள் கண்டிப்பாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் தொகை விரைவில் கிடைக்கவுள்ளதா? அப்டேட் இதோ
தற்போது வருமான வரி விலக்கு வரம்பு 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.2.5 லட்சம், 60 முதல் 80 வயதுக்குட்பட்டவர்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ரூ.3 லட்சம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிடிடி-யின் புதிய உத்தரவுப்படி ரூ.60 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்தவர்கள் அல்லது தொழில் வருமானம் ரூ. 10 லட்சத்திற்கு மேல் பெறுபவர்கள் கட்டாயமாக ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுதவிர 60 வயதுக்குட்பட்டவருக்கு ஆண்டுதோறும் டிடிஎஸ் ரூ.25,000 கழிக்கப்பட்டு இருந்தால் அவர் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.50,000க்கு அல்லது அதற்கு மேல் கழிக்கப்பட்டிருந்தால் அவரும் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சேமிப்புக் கணக்கில் ரூ.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்திருப்பவர்களும் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? எந்த ஆவணங்கள் தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ