ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்த செய்தியை முன்னர் வெளியிட்டது. அதன்படி, இபிஎஸ்-95 ஓய்வூதியதாரர்கள் இனி எந்த நேரத்திலும் அவர்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம், அதாவது ஒரு ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம் என்று அதில் கூறப்பட்டது. அத்தகைய ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பிக்கும் வாழ்க்கைச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும், அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், இந்த ஆண்டும் இந்தத் தேதிக்குள் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்கள் அவர்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது, அப்படி செய்யாவிட்டால் ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.
மேலும் படிக்க | 7th pay commission: 18 மாத அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட்
இபிஎஸ்-95ன் கீழ் வரும் ஓய்வூதியதாரர்களைத் தவிர, 30 நவம்பர் 2022க்குள் ஆயுள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமானைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனை ஓய்வூதியர்கள் சுலபமாக ஆன்லைன் மூலம் செய்துகொள்ளலாம். இபிஎஃப்ஓ-ன் படி ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) ஓய்வூதியம் பெறுவோர் அவர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க உதவுகிறது. மேலும் டிஎல்சி சேவையைப் பயன்படுத்தியும் ஆயுள் சான்றிதழை உங்கள் வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்கலாம், இந்த வசதியின் கீழ் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து ஒரு தபால்காரர் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் வீட்டில் டிஎல்சியை உருவாக்கும் செயல்முறையை முடிப்பார்.
ஆன்லைன் மூலம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தல்:
1) https://jeevanpramaan.gov.in/ -ல் ஆதார் விவரங்கள் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
2) இதை செய்த பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும், அதைச் சமர்ப்பிக்கவும்.
3) ஓடிபி அங்கீகாரத்திற்குப் பிறகு, பயன்பாட்டிலிருந்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழைப் டவுன்லோடு செய்யவும்.
4) பென்ஷன் பேமெண்ட் ஆர்டர், வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டு பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்கவும்.
5) பின்னர் உங்கள் மொபைல் எண்ணிற்கு டிஎல்சி ஐடி அனுப்பப்படும்.
6) இதற்குப் பிறகு உங்களுக்கு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பு நடைபெறும்.
ஆஃப்லைனில் மூலம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தல்:
ஜீவன் பிரமன் பத்ரா போர்ட்டலில் இருந்து டிஜிட்டல் லைஃப் சான்றிதழை உருவாக்குவதைத் தவிர, நீங்கள் அதை வங்கி, அரசு அலுவலகம், தபால் அலுவலகம் மூலமாகவும் பெறலாம். இங்கு குறிப்பிட்ட படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவங்கள் வங்கி அல்லது தபால் நிலைய கவுன்டரில் மட்டுமே கிடைக்கும், அங்கு கிடைக்காத பட்சத்தில் நீங்கள் ஊழியர்களிடம் கேட்டு படிவத்தை பெறலாம்.
மேலும் படிக்க | UPI பாஸ்வேர்டை PAYTM வழியாக மாற்றுவது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ