7வது ஊதியக்குழு, சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியுடன் ஆண்டு துவங்கியுள்ளது. அகவிலைப்படி (டிஏ) அதிகரிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கும் இந்த வேளையில், மற்றொரு முக்கிய அலவன்சான வீட்டு வாடகை கொடுப்பனவிலும் ஏற்றம் இருக்கும் என நம்பப்படுகின்றது. ஜனவரி 2024 முதல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டவுடன், எச்ஆர்ஏ -இல் ஒரு பெரிய ஏற்றம் இருக்கும், அதில் திருத்தம் செய்யப்படும். மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி குறைந்தபட்சம் 50 சதவீதமாக உயரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டினால், எச்ஆர்ஏ -இல் 3 சதவிகிதம் திருத்தம் ஏற்படும்.
7th Pay Commission: அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியது
மத்திய அரசு ஊழியர்களுக்கான (Central Government Employees) புதிய ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் (AICPI Index) ஊக்கமளிக்கும் வகையில் வந்துள்ளன. குறியீடு 139.1 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி மதிப்பெண் 49.68 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது அகவிலைப்படி (Dearness Allowance) 50 சதவீதத்தை எட்டுவது உறுதி. டிசம்பர் 2023க்கான குறியீட்டு எண்கள் இன்னும் வரவில்லை. இதில் சரிவு ஏற்பட்டாலும் 50 சதவீதம் அகவிலைப்படி கிடைப்பது உறுதி. அகவிலைப்படி அதிகரிப்புடன் (DA Hike), மற்ற கொடுப்பனவுகளின் அதிகரிப்புக்கான வழியும் தெளிவாகியுள்ளது.
வீட்டு வாடகை கொடுப்பனவு அதிகரிக்கப்படும்
அகவிலைப்படி தற்போது 46 சதவீதமாக உள்ளது. இது 50 சதவிகிதத்தை எட்டினால் எச்ஆர்ஏ (HRA) திருத்தப்படும் என்பது விதி. இது போல ஜூலை 2021 இல் நடந்தது. அந்த நேரத்தில், அகவிலைப்படி 25 சதவீதத்தைத் தாண்டியபோது HRA இல் 3 சதவீதம் திருத்தம் செய்யப்பட்டது. அப்போது உச்ச வரம்பு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதேபோல் இப்போது, வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance) மீண்டும் 3 சதவீதம் அதிகரிக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. HRA இன் அடுத்த திருத்தம் மார்ச் 2024 -க்குள் நடக்கலாம்.
மூன்று வகைகளிலும் HRA 3 சதவீதம் அதிகரிக்கும்
DoPT படி, மத்திய ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவின் திருத்தம் (HRA Hike) அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்டுள்ளது. HRA இன் வகைகள் X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவின் படி தற்போதைய விகிதங்கள் 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் ஆக உள்ளன. இது ஜூலை 1, 2021 முதல் பொருந்தும். 2016 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட குறிப்பாணையின்படி, அகவிலைப்படியுடன் (DA) உடன் HRA அவ்வப்போது திருத்தப்படும். அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டும்போது அடுத்த திருத்தம் நடக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த மாதம் அதாவது ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி 50% -ஐ தாண்டும் சாத்தியம் உள்ளதால், இந்த மாதம் முதலே எச்ஆர்ஏ திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | Budget 2024: வரி அடுக்கில் மாற்றம், வரி விலக்கு... காத்திருக்கும் மெகா அறிவிப்புகள்?
வீட்டு வாடகை கொடுப்பனவு எவ்வளவு அதிகரிக்கும்?
வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 3% ஆக இருக்கும். HRA இன் அதிகபட்ச விகிதம் தற்போதுள்ள 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும். அகவிலைப்படி 50% ஐ எட்டும்போது, HRA 30%, 20% மற்றும் 10% ஆக அதிகரிக்கும். எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்களுக்கு 27 சதவீதம் ஹெச்ஆர்ஏ வழங்கப்படுகிறது, இது 30 சதவீதமாக அதிகரிக்கும். அதே போல். ஒய் கிளாஸ் நபர்களுக்கு இது 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு மக்களுக்கு இது 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.
HRA: நகரங்களின் பிரிவு எப்படி முடிவு செய்யப்படுகிறது?
50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் X பிரிவில் வருகின்றன. இந்த நகரங்களில் பணியமர்த்தப்படும் மத்திய பணியாளர்களுக்கு தற்போது 27 சதவீதம் ஹெச்ஆர்ஏ வழங்கப்படுகிறது. Y பிரிவு நகரங்களில் இது 18 சதவீதமாகவும், Z பிரிவில் 9 சதவீதமாகவும் உள்ளது.
மேலும் படிக்க | வேலை செய்தா, இந்த நிறுவனத்தில் தான் செய்யனும்! ஊழியர்களை முதலாளியாக்கும் Ideas2IT
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ