வாட்ஸ் ஆப்-க்கு போட்டியாக ‘கிம்போ’ செயலியை அறிமுகம் செய்த பதஞ்சலி

பதஞ்சலி நிறுவனம் "கிம்போ" என்ற புதிய மெசேஜ் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 31, 2018, 09:51 AM IST
வாட்ஸ் ஆப்-க்கு போட்டியாக ‘கிம்போ’ செயலியை அறிமுகம் செய்த பதஞ்சலி title=

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பதஞ்சலி என்ற நுகர்வோர் நிறுவத்தை தொடங்கி வெற்றிகரமாக யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வருகிறார். இந்நிலையில்  தற்போது தொலைத்தொடர்பு துறையிலும் பதஞ்சலி அடி எடுத்து வைத்துள்ளது. ஆமாம், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துடன் சேர்ந்து "சுதேதி சம்ரித்தி" என்ற சிம் கார்டை அறிமுகம் செய்துள்ளது பதஞ்சலி நிறுவனம். 

இந்த "சுதேதி சம்ரித்தி" சிம் கார்டு பதஞ்சலி கடைகளிலும் மற்றும் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 5 லட்சம் கடைகளிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சிம் கார்டில் ரூ.144 செலுத்தி ரீ-சார்ஜ் செய்தால் அன்லிமிடெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள் என பல்வேறு அதிரடி சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இதற்க்கான ஒப்பந்தம் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

மேலும் இந்த "சுதேதி சம்ரித்தி" சிம் கார்டு வாங்கும் வாடிக்கையாளருக்கு மருத்துவ காப்பீடு திட்டமும் வழங்ககப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. தற்போது முதற்கட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சிம்கார்டுகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம் கார்டை அடுத்து, இந்தியாவில் கிட்டத்தட்ட 20 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ்-ஆப் செயலிக்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனம் "கிம்போ" என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. "கிம்போ" செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

"கிம்போ" செயலி வாட்ஸ-ஆப் செயலிக்கு கடும் போட்டியாக இருக்கும் என்றும், இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெரும் எனவும் விளம்பரப் படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News