சிரியாவை தாக்கும் அமெரிக்க ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் -ரஷ்யா

சிரியா மீது அமெரிக்கா ஏதேனும் ஏவுகணைகளை ஏவினால், அதனை சுட்டு வீழ்த்துவோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 11, 2018, 06:17 PM IST
சிரியாவை தாக்கும் அமெரிக்க ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் -ரஷ்யா title=

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் வகையில் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், சிரிய அரசு டோமாவில் ரசாயனத் தாக்குதல் நடத்து உள்ளது. இந்த தாக்குதலில் 70-க்கு மேற்ப்பட்டோர் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 500 பேர் காயம் அடைந்துள்ளதாக, அங்கு உள்ள மருத்துவக்குழு தெரிவித்தது.

இச்சம்பவத்திற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம், "சிரியா அரசு நடத்தும் ரசாயனத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் எனப் பலரும் பலியாகியுள்ளனர். இது மிக கொடூரத் தாக்குதல். இந்த தாக்குதலுக்கு சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் ரஷ்யா அதிபர் பொறுப்பேற்க வேண்டும். ரசாயனத் தாக்குதல் நடத்தியதற்கு பெரும் விளைவுகளை கொடுக்க வேண்டி இருக்கும் என கூறியிருந்தார். 

இதனையடுத்து, தற்போது அமெரிக்கா தனது போர்க்கப்பல் குழு ஒன்றை சிரிய கடற்கரைப் பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியா மீது அமெரிக்கா ஏதேனும் ஏவுகணைகளை ஏவினால், அதனை சுட்டு வீழ்த்துவோம். சிரியாவை காப்பது தங்களுக்கு உரிமை உள்ளதாகவும், மேலும் ஏவுதளங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லெபனானுக்கான இரஷ்ய தூதர் கூறியுள்ளார்.

Trending News