நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் திருமணம் மிகவும் எளிமையாக அவரது வீட்டில் நடைபெற்றது. சமூக ஆர்வலராக உலக அளவில் பிரபலமான மலாலாவின் கணவர் அஸர் மாலிக் பற்றிய தகவல்கள் இன்னும் பரவலாக தெரியவில்லலை. அசர் மாலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (Pakistan Cricket Board) உயரதிகாரியாக பணிபுரிகிறார்.
24 வயதான மலாலா யூசுப்சாய், தனது நீண்ட நாள் நண்பர் அசர் மாலிக்கை திருமணம் செய்து கொண்டதாக சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். மலாலா யூசுப்சாய் - அஸ்ஸர் மாலிக் திருமணம், மலாலாவின் பர்மிங்காம் வீட்டில் நடைபெற்றது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துக் கொண்ட தனது திருமணப் புகைப்படங்களையும் மலாலா பகிர்ந்துள்ளார்.
திருமணம் என்ற அமைப்பின்மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், ஆனால் தனது வாழ்க்கையில் அஸ்ஸரை சந்தித்தப் பிறகு தனது சிந்தனைப்போக்கு மாறியது என்று மலாலா யூசுப்சாய் தனது நேர்காணல்களில் தெரிவித்திருந்தார்.
Today marks a precious day in my life.
Asser and I tied the knot to be partners for life. We celebrated a small nikkah ceremony at home in Birmingham with our families. Please send us your prayers. We are excited to walk together for the journey ahead.
@malinfezehai pic.twitter.com/SNRgm3ufWP— Malala (@Malala) November 9, 2021
அசர் மாலிக் யார்?
அசர் மாலிக் மே 2020ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் சேர்ந்தார், அவரது லிங்க்ட்இன் சுயவிவரம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் பல்வேறு கிரிக்கெட் நிகழ்வுகளின் பல புகைப்படங்கள் உள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பணியில் சேர்வதற்கு முன்னதாக, அசர் மாலிக் ஒரு அமெச்சூர் லீக்கில் ஒரு உயர்தர பொறுப்பு வகித்துக் கொண்டிருந்தார். ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ படி, அசர் ஒரு பிளேயர்-மேனேஜ்மென்ட் ஏஜென்சியின் நிர்வாக இயக்குனராகவும், அமெச்சூர் லீக் லாஸ்ட் மேன் ஸ்டாண்டில் உரிமையாளராகவும் இருந்தார்.
அஸ்ஸர் மாலிக், பாகிஸ்தான் சூப்பர் லீக் (Pakistan Super League (PSL)) உரிமையாளரான முல்தான் சுல்தான்களுடன் இணைந்து மேலாளராக பணிபுரிந்தார். அதோடு, மேலாண்மை நிறுவனம் ஒன்றையும் நடத்தினார். அசர் மாலிக் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் (LUMS) 2012 இல் (2008-2012) பொருளாதாரம் மற்றும் அரசியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
Also Read | பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் சம்மன்
இவை மட்டுமல்ல, நாடகங்களைத் தயாரிக்கும் டிராமலைன் (Dramaline) என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். அஸர் மாலிக் - மலாலா யூசுப்சாய் ஜோடி 2019ம் ஆண்டு தான் முதன்முதலாக ஒருவரையொருவர் சந்தித்தனர். இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில், பாகிஸ்தானுக்கு உற்சாகமூட்டும் வகையில் குழு செல்ஃபியை அஸர் மாலிக் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அப்போது மலாலா அவருடன் இருந்தார்.
பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் தலிபான்களின் முயற்சிகளுக்கு எதிரான செயல்பாட்டிற்காக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய். இதற்காக, 15 வயது மலாலா யூசுப்சாயை, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். தலையில் குண்டு காயமடைந்த மலாலா இங்கிலாந்துக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.
அதன்பிறகு இங்கிலாந்தில் வசிக்கும் மலாலா, 2014 ஆம் ஆண்டில், அதாவது தனது 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களிலேயே மிகவும் வயது குறைந்தவர் மலாலா தான்.
பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்கும் தலிபான்களின் முயற்சிகளுக்கு எதிரான செயல்பாட்டிற்காக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற மலாலா, 2020ம் ஆண்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
ALSO READ | டெல்டா மாறுபாட்டால் சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR