நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! ஜபோரிஜியா அணுமின் நிலைய தாக்குதலை கண்டித்த ஐநா!

ஜபோரிஜியா ஆலை மீது ரஷ்ய தாக்குதல்லுக்கு சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்!

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 21, 2022, 11:34 PM IST
  • உக்ரைனில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜபோரிஷியா அணுமின் நிலையம் மீதான தாக்குதல்.
  • சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி வெளியிட்ட அறிக்கை.
  • நிலையத்தில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்களில் சில வெடிப்புகள் காணப்பட்டதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! ஜபோரிஜியா அணுமின் நிலைய தாக்குதலை கண்டித்த ஐநா! title=

ஜபோரிஜியா ஆலை மீது ரஷ்ய தாக்குதல்: உக்ரைனில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜபோரிஷியா அணுமின் நிலையம் மீதான தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) அணு விவகாரத் தலைவர் ரஃபேல் க்ரோஸி கண்டனம் தெரிவித்துள்ளார். அதை பைத்தியக்காரத்தனம் என்று வர்ணித்த அவர், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என பரிந்துரைத்தார். கடந்த வாரத்தில், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் தளமான உக்ரைனின் ஜபோரோஜியே பகுதியில் ஷெல் தாக்குதல்கள் சக்திவாய்ந்த வெடிப்புகளுடன் உலுக்கியது.

ஞாயிற்றுக்கிழமை மாலை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய இராணுவத் தாக்குதல்களின் கடுமையான ஷெல் தாக்குதல்கள் உக்ரைனின் சுமார் 400 கிழக்குப் பகுதிகளையும் தாக்கியதாகக் கூறினார். கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தில் கடுமையான  சண்டை நடந்து கொண்டிருந்தது.

"இந்த பெரிய அணுமின் நிலையத்தின் தளத்தில் வெடிப்பு ஏற்பட்டது என்ற செய்தியால் எங்கள் குழு மிகவும் கவலையடைந்துள்ளது, இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸி கூறினார். ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதற்குப் பின்னால் யாராக இருந்தாலும், இதை உடனடியாகத் நிறுத்த வேண்டும். நான் ஏற்கனவே பலமுறை கூறியது போல், நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்!" என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | NRI News: இரட்டை வரி விதிப்பை எளிதாக தவிர்க்கலாம், விவரம் இதோ

அணு மின் நிலைய தளத்திற்கு அருகாமையிலும் அந்த இடத்திலும் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏவுகணைத் தாக்குதல், அதிகமான வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும்,  நிலையத்தில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்களில் சில வெடிப்புகள் காணப்பட்டதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தளத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் கதிர்வீச்சு அல்லது மின்சார இழப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

பிரான்ஸ் ஒளிபரப்பு நிறுவனத்திடம் பேசிய ரஃபேல் க்ரோசி, ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த சம்பவம் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. Zaporizhzhya மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த தாக்குதல்கள் ஆலையில் அணுசக்தி பேரழிவு அபாயத்தை அதிகரித்துள்ளன. பிப்ரவரி 24 அன்று உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடக்கிய நிலையில், 9 மாதங்களாக சண்டை நீடிக்கிறது.

மேலும் படிக்க | நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான விதிகளை தளர்த்தியது கனடா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News