“கன்சர்வேடிவ் கட்சிக்காரர்கள் ஒரே குடும்பம்": தோல்விக்கு பிறகு பேசிய ரிஷி சுனக்

UK Prime Minister: 47 வயதான டிரஸ், மார்கரெட் தாட்சர் மற்றும் தெரசா மே ஆகியோருக்குப் பிறகு பிரிட்டனில் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார்.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2022, 11:36 AM IST
  • பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தோல்வி அடைந்தார்.
  • 42 வயதான பிரிட்டிஷ் இந்திய முன்னாள் சான்சலர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
“கன்சர்வேடிவ் கட்சிக்காரர்கள் ஒரே குடும்பம்": தோல்விக்கு பிறகு பேசிய ரிஷி சுனக் title=

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் பிரதமர் தேர்தலில் தோல்வியை தழுவிய சில நிமிடங்களுக்குப் பிறகு, ரிஷி சுனக் திங்கள்கிழமை (செப்டம்பர் 5, 2022) புதிதாக நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் டிரஸிற்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்குமாறு கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். ரிஷி சுனக் 60,399 வாக்குகளைப் பெற்றார். அவரது சக கட்சித் தலைவர் ட்ரஸ் 81,326 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். ரிஷி சுனக், தனது தோல்விக்கு பிறகு, “கன்சர்வேடிவ் கட்சிக்காரர்கள் ஒரே குடும்பம்" என்று கூறினார்.

42 வயதான பிரிட்டிஷ் இந்திய முன்னாள் சான்சலர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

"இந்தப் பிரச்சாரத்தில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. கன்சர்வேடிவ் கட்சியினர் ஒரே குடும்பம் என்று நான் முன்னரும் கூறியுள்ளேன். புதிய பிரதமரான லிஸ் டிரஸுக்கு ஆதரவாக நாம் இப்போது ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அவர் கடினமான காலங்களில் நாட்டை வழிநடத்துகிறார்" என்று சுனக் ட்வீட் செய்துள்ளார். 

47 வயதான டிரஸ், மார்கரெட் தாட்சர் மற்றும் தெரசா மே ஆகியோருக்குப் பிறகு பிரிட்டனில் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார்.

மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு 

இந்த 'கடினமான காலங்களில்' இங்கிலாந்தை வழி நடத்த தைரியமான நடவடிக்கைகளை எடுப்பேன்: லிஸ் ட்ரஸ் 

கடுமையாக போட்டிகள் நிறைந்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், "இந்த கடினமான காலங்களில்" பிரிட்டனை செழுமையான எதிர்காலம் நோக்கி அழைத்துச் செல்ல துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கூறினார்.

"கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த பெரிய நாட்டிற்கு தலைமை தாங்கி வழி நடத்துவேன் என என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இந்த கடினமான காலங்களில் நம் அனைவரையும் முன்னோக்கி அழைத்துச்செல்லவும், நமது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நான் தைரியமான நடவடிக்கைகளை எடுப்பேன்." என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறினார்.

டிரஸ் தனது ஏற்புரையில், "நாங்கள் மக்களுக்கு வேண்டியதை வழங்குவோம்" என்று அறிவித்தார்.

"எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வை கொண்டு வருவேன், மக்களின் எரிசக்தி கட்டணங்களை முறையாகக் கையாண்டு எரிசக்தி விநியோகத்தில் உள்ள நீண்டகால பிரச்சினைகளையும் சரி செய்வேன்”. என்று தெரிவித்தார். தலைமைப் பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய பிரச்சினையாக இது உள்ளது. வேடிக்கையாக இதை அவர், “வரலாற்றில் மிக நீண்ட வேலை நேர்காணல்களில் இதுவும் ஒன்று" என்று கூறினார்.

தனது சக இறுதிப் போட்டியாளர் சுனக்கிற்கு நன்றி தெரிவித்த பிறகு, ட்ரஸ் வெளியேறும் தலைவர் ஜான்சனுக்கும் வாழ்த்து கூறினார்.

"போரிஸ், நீங்கள் பிரெக்சிட்டை இறுதி செய்தீர்கள். நீங்கள் (எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் முன்னாள் தலைவர்) ஜெர்மி கோர்பினை நசுக்கிவிட்டீர்கள், தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொண்டீர்கள். விளாடிமிர் புடினுக்கு எதிராக நின்றீர்கள். நீங்கள் அனைவராலும் பாராட்டப்படுவீர்க்ள்” என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க | UK Election: பரபரப்பான இறுதி கட்ட தேர்தல்; பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News