ஸ்பெயினில், 21 பயணிகள் விமானத்தில் இருந்து ஓடுபாதை வழியாக தப்பிச் சென்றதால், ஸ்பெயினில் உள்ள விமான நிலையத்தை அதிகாரிகள் 4 மணி நேரம் மூடினர். இது தொடர்பாக, ஸ்பெயினில் போலீசார் 12 பேரை கைது செய்து மேலும் 9 பேரை தேடி வருகின்றனர். பயணிகள் குழு ஒன்று பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில் (Palma de Mallorca airport) ஓடுபாதையில் தப்பி ஓடியதால் விமான நிலையம் பல மணி நேரம் மூடப்பட்டது.
காசாபிளாங்காவில் இருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற ஏர் அரேபியா மரோக் விமானம், ஒரு பயணி நோய்வாய்ப்பட்டதாகக் எழுந்த புகாரையடுத்து, ஸ்பெயின் (Spain) பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்று விமான நிலைய அதிகாரி கூறினார். தப்பிச் சென்ற 12 பேரில் நோய்வாய்ப்பட்ட பயணியும் அடங்குவர், அவர் ஒரு துணையுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனைவருக்கும் கிளியரன்ஸ் வழங்கப்பட்டது.
ALSO READ | SpaceX விண்கல கழிப்பறையில் கசிவு; டயப்பரை பயன்படுத்திய விண்வெளி வீரர்கள்
பால்மாவின் விமான நிலையத்தில் அவசரகால தரையிறக்கங்கள் அவ்வப்போது கோரப்படுவது சகஜம் தான் என்று கால்வோ கூறினார், பயணிகள் ஏன் தப்பி ஓட முயன்றனர்; இது திட்டமிடப்பட்ட செயலா அல்லது யதேச்சையாக நடந்த சம்பவமா என்பதை போலீசார் கண்டறிய முயன்று வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் எவரும் ஸ்பெயினில் தஞ்சம் கோர முயற்சிக்கவில்லை.
"இவர்கள் கடல் வழியாக வந்தவர்கள் அல்ல, ஆனால் சட்டவிரோதமான வழியில் வந்தவர்கள், எனவே அவர்கள் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்," என விமான நிலைய அதிகாரி கூறினார்.
விமான நிலைய ஆபரேட்டர் இது குறித்து கூறுகையில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு தரையிறங்க வேண்டிய விமானங்கள் பார்சிலோனா, இபிசா மற்றும் மெனோர்கா உள்ளிட்ட பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. அவசர கால தரையிறக்கத்திற்கு காரணமான பயணி உண்மையில் நோய்வாய்ப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ள நிலையில், அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ALSO READ | விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்; வெற்றிகரமாக திரும்பும் படக் குழு..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR