ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை

அமெரிக்கா  ரஷ்யாவிடம் இருந்து  எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்க தடைகளை அறிவித்துள்ளது. இருப்பினும், ஐரோப்பாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் இந்த முயற்சியில் அமெரிக்காவும் பெரிதும் பாதிக்கப்படும் என்று அதிபர் பிடன் கூறினார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 9, 2022, 06:11 AM IST
  • அமெரிக்காவில் எண்ணெய் விலை உயர வழிவகுக்கும்.
  • ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது.
  • தடைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே விலையில் வரலாறு காணாத ஏற்றம்
ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை title=

அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து அனைத்து வகையான எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோல் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இன்று தெரிவித்தார்.

இருப்பினும், இதனால், அமெரிக்காவில் எண்ணெய் விலை உயர வழிவகுக்கும் என்று அவர் கூறினார். உலக வரலாற்றில் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அதிபர் தெரிவித்தார். இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல்  தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அமெரிக்கர்கள் விலைவாசி உயர்வை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். , 'சுதந்திரத்தைப் பாதுகாக்க, அமெரிக்கர்களாகிய நாம் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும்' என்று தான் கூறியதாக ஜோ பைடன் தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடியாக, அதன் பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செவ்வாயன்று இந்தத் தடைகளை அறிவித்தார். ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து எண்ணெய் பொருட்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என்றார். இருப்பினும், இதனால், அமெரிக்காவில் பெட்ரோல் விலைகள் அதிகரிக்கும் என்பதை அதிபர் பிடன் ஒப்புக்கொண்டார்.

மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

ரஷ்யாவிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதியை குறைக்குமாறு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்தது. ரஷ்யா மீது பொருளாதார தடைகள் முன்னதாகவே அறிவிக்கப்பட்ட போதிலும், நிதித்துறை மீது கடுமையான தடைகள் இருந்தபோதிலும், எண்ணெய் ஏற்றுமதி காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மறுபுறம், ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவிப்பதற்கு முன்பே, அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டது. செவ்வாயன்று அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோலின் சராசரி விலை 4.17 டாலர்களை எட்டியது. கோடை காலம் வருவதால், நாட்டில் பெட்ரோல் தேவையும் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News