நேபாள பிரதமர் ஒளிக்கு நீடிக்கும் அரசியல் நெருக்கடி... வலுவடையும் எதிர்ப்பு..!!!

நேபாள பிரதமர் கே.பி. ஓலி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர் புஷ்பா கமல் தஹால் அவரை சந்தித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 5, 2020, 06:35 PM IST
  • கே.பி. ஒளியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு தஹால் முதலில் அதிபர் பித்யா தேவி பண்டாரியை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
  • முக்கிய கட்சி கூட்டம் ஜூலை 6 அன்று நடைபெறும்
  • NCP யின் கிளர்ச்சி பிரிவு , கே.பி. சர்மா ஒளி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யக் கோரியுள்ளது
நேபாள பிரதமர் ஒளிக்கு நீடிக்கும் அரசியல் நெருக்கடி... வலுவடையும் எதிர்ப்பு..!!!  title=

நேபாளத்தில் (Nepal) அதிபர் பி.டி.பண்டாரியை (BD.Bhandari) சந்தித்த பின்னர், NCP தலைவர் பி.கே.தஹால் பிரதமர் கே.பி. சர்மா ஒளியுடன் (KP. Sharma Oli) பேச்சுவார்த்தை நடத்துகிறார். முக்கிய கட்சி கூட்டம் ஜூலை 6 அன்று நடைபெறும்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் கிளர்ச்சி பிரிவில் கே.பி. சர்மா ஒளி (KP. Sharma Oli) பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கை வலுக்கும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர் புஷ்பா கமல் தஹால் (Pushpa Kamal Dahal) நேபாள பிரதமரை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) அவரது இல்லத்தில் சந்தித்தார். இரு தலைவர்களுக்கிடையில் இரண்டாவது சுற்று சந்திப்பு, நாளை நடைபெற வாய்ப்புள்ளது என்று ANI தெரிவித்துள்ளது.

காத்மாண்டு (Kathmandu): நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் கிளர்ச்சி பிரிவில் கே.பி. ஓலி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர் புஷ்பா கமல் தஹால் நேபாள பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தார். இரு தலைவர்களுக்கிடையில் இரண்டாவது சுற்று சந்திப்பு நாளை நடைபெற வாய்ப்புள்ளது என்று ANI தெரிவித்துள்ளது.

ALSO READ | இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் கைது.... கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி...!!!

நேபாளத்தின் (Nepal) பிரதமர் கே.பி. ஒளியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பு தஹால் முதலில் அதிபர் பித்யா தேவி பண்டாரியை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், தனது சர்வாதிகார பாணி மற்றும் இந்தியா எதிர்ப்பு அறிக்கைகள் மூலம் உருவான கருத்து வேறுபாடுகளை தீர்க்க உயர் மட்ட தலைக்கு சிறிது கால அவகாசம் அளிக்கும் நோக்கில், பிரதமர் கே.பி. சர்மா ஒளியின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நேபாளத்தின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய கூட்டம் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ALSO READ |  Hydroxychloroquine, HIV மருந்துகள் COVID-19  பரிசோதனைகளில் பயன்படுத்தப்படாது: WHO

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் 45 பேர் கொண்ட அதிகாரம் பெற்ற நிலைக்குழுவின் கூட்டம் ஜூலை 4 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் அது கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

NCP யின் கிளர்ச்சி பிரிவு , கே.பி. சர்மா ஒளி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யக் கோரியுள்ளது என்றும் அதே நேரத்தில் வேறு சில தலைவர்கள் பிரதமர் மற்றும் கட்சி இணைத் தலைவர் ஆகிய இரு பதவிகளிலிருந்தும் விலகுமாறு கேட்டுக் கொண்டனர் என்றும் தி ஹிமாலயன் டைமஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆயினும், ஒளி பதவி விலக மறுத்துவிட்டார். ஒளி மற்றும் தஹால் இருவரும் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளாமல் இருப்பதால், முட்டுக்கட்டை தொடர்கிறது என, நிலைக்குழு உறுப்பினர் ஹரிபோல் கஜுரேலின் கூறினார்.

ஆட்சியில் ஒருவர் மாற்றி ஒருவர்  தலைமை வகிக்க வேண்டும் என்ற தங்களுக்கு இடையே உடன்பாடு இருந்தபோதிலும், கே.பி.சர்மா ஒளிக்கு முழு ஐந்தாண்டு கால அவகாசம் வழங்கியதாகவும்,  ஆனால் ஒரு பிரதமராக  நாட்டை சிறப்பாக நடத்த அவர் தவறிவிட்டார் எனவும் தஹால் சனிக்கிழமையன்று கூறினார்.  கட்சியில் விரக்தி அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

பிரதமரை பதவி நீக்கம் செய்ய தஹால்-நேபாள பிரிவின் எந்தவொரு முயற்சியும் கட்சியின் பிளவிற்கு வழிவகுக்கும் என்பதோடு, மத்திய மட்டத்தில் மட்டுமல்ல, மாகாண மற்றும் உள்ளூர் மட்டங்களிலும் ஏற்படும் விளைவுகளை கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது.

Trending News