நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை... இன்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ராஜினாமா?

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க  கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 9, 2023, 04:10 PM IST
  • பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை.
  • பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளது.
  • நாடாளுமன்ற கீழவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 12ம் தேதியுடன் முடிவடைகிறது.
நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை... இன்று பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ராஜினாமா? title=

பாகிஸ்தான் அரசியலுக்கு இன்று மிக முக்கியமான நாள். கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் பாகிஸ்தான், இப்போது அரசியல் ஸ்திரத்தனமை தொடர்பான பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் நிலையில் உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் புதன்கிழமை தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளுக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் நாடாளும்னறத்தை முன்கூட்டியே கலைக்குமாறு அதிபர் ஆரிஃப் அல்விக்கு புதன்கிழமை கடிதம் எழுத உள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் செவ்வாயய் கிழமை அன்று தெரிவித்தார். ஷாபாஸ் ஷெரீப் தனது பதவியை ராஜினாமா செய்தால், இடைக்கால அரசாங்கம் நாட்டின் பொறுப்பை ஏற்கும். நாடாளுமன்ற கீழவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 12ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பிரதமரின் ஆலோசனையை அதிபர் அல்வி ஏற்றுக் கொண்டால் 48 மணி நேரத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.

தேர்தல் நடத்த 3 மாதங்கள் அவகாசம்

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்யப்பட்ட்டுள்ளதை தொடர்ந்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்கு சென்ற அவருக்கு, அங்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்யப்படாவிட்டால், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கூட்டணி அரசாங்கம் இன்னும் சில நாட்கள் ஆட்சியில் இருந்திருக்க கூடும்.

நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை

முன்னதாக , ஆகஸ்ட் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அத்தகைய திடீர் அறிவிப்பை வெளியிட அதிபர் அல்வி மறுத்துவிடுவார் என்று கட்சி அஞ்சியது. இவ்வாறான சூழ்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை அளிக்க வேண்டும் என PML-N கட்சிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் அதிபர் ஏதேனும் ஒரு காரணத்தை காட்டி பிரதமரின் பேச்சைக் கேட்காவிட்டாலும், நாடாளுமன்றம் குறித்த நேரத்தில் கலைக்கப்படும். இந்நிலையில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலை நடத்த 90 நாட்கள் அவகாசம் கிடைக்கும்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் பிரதமர் பதவி ஒரு முள்கிரீடம்... இது வரை சிறை சென்ற பிரதமர்கள் பட்டியல் இதோ..!

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமா?

எனினும், பாகிஸ்தானில் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. அரசியல் சாசன காலம் முடிந்த 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 90 நாட்கள் கூட குறைவாக காலமே என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். இப்போது தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பிறகு தான் தேர்தலை நடத்த முடியும். இப்போது புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் நிலையில், ​​புதிய எல்லை நிர்ணயமும் செய்யப்பட உள்ளது. இதற்காக தேர்தல் கமிஷனுக்கு 120 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பின் தான், தேர்தல்களை நடத்துவது தொடர்பான பணி தொடங்கும். இதனால், தேர்தல்களை நடத்துவதில் சில மாதங்கள் தாமதமாகும் என கூறப்படுகிறது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் கூறிய கருத்து

2023ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லாவும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில், இடைக்கால பிரதமர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுவது குறித்து பிரதமரை இதுவரை  யாரும் சந்திக்கவில்லை என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராஜா ரியாஸ் தெரிவித்துள்ளார். எனினும் நாளை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறும் என்று நம்புவதாகவும், அதில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் கொடூர ரயில் விபத்து! 30 பேர் பலி! 80க்கு அதிகமானவர்கள் காயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News