ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற குரங்கு ஒன்று வித்தியாசமான பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவின் பஞ்சாபிலிருந்து பாகிஸ்தானின் பஹவல்பூர் நகரத்தை அடைந்த ஒரு குரங்கை பராமரிக்கவோ, அல்லது மிருகக்காட்சிசாலையில் வைக்க பாகிஸ்தான் தயாராக இல்லை. பாகிஸ்தானின் மிகப்பெரிய அவசரகால சேவை மீட்பு 1122 என்னும் பிரிவு, இந்தியாவின் பஞ்சாபிலிருந்து பஹவல்பூர் நகரத்தை அடைந்த ஒரு குரங்கைப் பிடித்துள்ளது. ஆனால் இப்போது அதை இந்தியாவிடம் ஒப்படைப்பது மிகவும் சிக்கலாக உள்ளது. பல மணி நேர முயற்சிக்கு பிறகு மீட்பு குழுவினர் 200 அடி உயர செல்லுலார் டவரில் இருந்து குரங்கை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், குரங்கு பிடிபட்டதையடுத்து, வன அதிகாரிகள் அதனை காட்டு பகுதியில் விடாமல், உள்ளூர் மிருகக்காட்சிசாலையை தொடர்பு கொண்டு, குரங்கை வைக்குமாறு கோரியுள்ளனர். ஆனால் அவரது கோரிக்கையை மிருக காட்சி சாலை நிராகரித்தது. குரங்கை வைக்க உயிரியல் பூங்காவில் இடம் இல்லை என்று கூறி கை விரித்து விட்டது. இதுகுறித்து மாவட்ட வனவிலங்கு அலுவலர் முனாவர் உசேன் நஜ்மி கூறுகையில், பஹவல்பூர் உயிரியல் பூங்காவில் கூடுதல் விலங்குகளை வைத்துக் கொள்ள எங்கள் துறையிடம் போதிய இடமோ, பணியாளர்களோ இல்லை என தெரிவித்து விட்டது.
அதிகாரி கூறும் மற்றொரு காரணம் என்னவென்றால், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழையும் பெரும்பாலான விலங்குகள் காயங்களால் இறக்கின்றன என்பதாகும். பஹவல்பூர் வனவிலங்குத் துறைக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர் கூட இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் கராச்சி காவல்துறை தலைமையகம் மீது பயங்கரவாத தாக்குதல்!
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் பெரும்பாலான விலங்குகள், குறிப்பாக லாங்கூர் மற்றும் பிற வகை குரங்குகள் காயங்களால் இறக்கின்றன என்று அவர் கூறினார். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க எங்களிடம் ஒரு கால்நடை மருத்துவர் இல்லை. அதனால்தான், அவற்றை எங்களால் பராமரிக்க முடியாது. ஏனென்றால் அவற்றை குணப்படுத்த முடியாது என கை விரித்து விட்டது மிருக காட்சி சாலை .
முன்னதாக கால்நடை மருத்துவர் இல்லாததால் ஷெர்ஷா சோதனைச் சாவடியில் ஒரு இந்திய லங்கூர் இறந்ததாக நஜ்மி மேலும் கூறினார். இருப்பினும், இவ்வாறான விலங்குகளின் காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான கால்நடை வைத்தியர் இல்லை என்பதை வன விலங்குகள் பாதுகாப்பு துறை அறிந்திருந்தும், இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட 20 வயது இளைஞர்!
மேலும் படிக்க | 5,000 ஆண்டுகள் பழமையான ஹோட்டலை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!
மேலும் படிக்க | எகிப்தின் 4300 ஆண்டு பழமையான தங்க மூலாம் பூசப்பட்ட மம்மி கண்டுபிடிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ