குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்கும் 8 நார்மல் பழக்கங்கள்!!

How To Sharpen Memory Power In Kids : பெற்றோர் பலருக்கு, அவரவர் குழந்தைகளின் புத்தி கூர்மையை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 

How To Sharpen Memory Power In Kids : குழந்தைகள்தான் வருங்கால சமுதாயத்தின் அடித்தளம். இவர்களை கொண்டாடும் விதமாக, ஜவாஹர்லால் நேருவின் பிறந்த தினமான இன்று (நவ.,14) குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் குழந்தைகளின் நினைவுத்திறனையும் புத்திக்கூர்மையையும் அதிகரிக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பார்ப்போமா? 

1 /8

விளையாட்டுகள்: நினைவுத்திறனை அதிகரிக்கும் வகையிலான விளையாட்டுகளை விளையாடலாம். புதிர் விளையாட்டுகள், ஒரே மாதிரியான கார்டுகளை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு போன்றவை

2 /8

சிறிய வகையில் உடற்பயிற்சி செய்ய தூண்டலாம். பார்க்கிற்கு அழைத்து சென்று விளையாட வைக்கலாம்.

3 /8

குழந்தைகளுக்கு கற்பனைத்திறன் அதிகமாக இருக்கும். அவர்கள் எதை படித்தாலும், எதை செய்தாலும் அதை இன்னொரு முறை நினைத்துபார்க்க வைக்க வேண்டும். 

4 /8

நினைவில் வைத்துக்கொள்ள கடினமாக இருக்கும் விஷயங்களை பாதியாக உடைத்து நினைவில் வைத்துக்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். 

5 /8

கற்றல் திறன் அவர்களுக்கு கசப்பானதாக மாறிவிடக்கூடாது. பாடங்களை, பாடல்களாக அல்லது கதைகளாக சொல்லிக்கொடுக்கலாம். இது அவர்கள் படித்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவும். 

6 /8

குழந்தைகளின் நினைவுத்திறன் அதிகரிக்க அவர்கள் 7-8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். 

7 /8

எந்த விஷயத்தை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை அவர்களை மீண்டும் மீண்டும் சொல்ல சொல்லுங்கள். இதனால், அந்த விஷயம் அவர்கள் மனதில் அப்படியே நிற்கும்.

8 /8

பெர்ரி பழங்கள், ஓமேகா 3 சத்து அடங்கிய உணவுகள், நட்ஸ், முட்டை, கீரை வகைகள் ஆகியவை மூளைத்திறனை அதிகரிக்கும் உணவுகளாக பார்க்கப்படுகிறது. இவற்றை மூளைத்திறன் அதிகரிக்க பயன்படுத்தலாம்.