பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானின் பேச்சுகள், செய்தியாளர் சந்திப்புகளை ஆகியவற்றை ஒளிபரப்பவும், மறு ஒளிப்பரப்பவும் அரசு நேற்று (நவ. 5) தடை விதித்தது.
இதுகுறித்து, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் (PEMRA) வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நாட்டின் தலைமைக்கும், அரசு நிறுவனங்களுக்கும் எதிராக வெறுக்கத்தக்க வகையிலும், அவதூறான வகையிலும் பேசும் அவசியமற்ற பேச்சுகளை ஒளிபரப்புவது அரசியலமைப்பின் முற்றிலும் மீறவதாக அமையும்" என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், "எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில், இம்ரான் கான் அவர் மீதான தாக்குதலுக்கு அரசு நிறுவனங்கள் மீது வீண் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அவரது பேச்சு பல்வேறு தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் எவ்வித ஊடக மேற்பார்வையும் இன்றி ஒளிப்பரப்படுகிறது.
மேலும் படிக்க | புதைத்தாலும் முளைப்பேன்.. என்னை கொல்ல முயல்வது வீண்.. இம்ரான் கான்
இதுபோன்ற உள்ளடக்கத்தை ஒளிபரப்புவது மக்களிடையே வெறுப்பை உண்டாக்கும். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் பாதகமாக இருக்கலாம். பொது அமைதி, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை சீர்குலைக்கும். இது அரசியலமைப்பின் 19ஆவது பிரிவை மீறுவதாக அமையும். PEMRA ஆணை 2002 இன் பிரிவு 27 மற்றும் எலக்ட்ரானிக் மீடியா நடத்தை விதி 2015" என்று PEMRA குறிப்பிட்டுள்ளது. இதை மீறினால், பொதுமக்கள் நலன் கருதி, எவ்வித அறிவிப்பும் இன்றி உடனடியாக தொலைக்காட்சி சேனலில் உரிமம் ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என எச்சரித்தது.
கடந்த வியாழக்கிழமை அன்று (நவ. 3) மாலை, இம்ரான் கான் வாஸிரபாத் அருகே துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில், அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இம்ரான் கான் நாட்டு மக்களிடம் முதல் முறையாக வீடியோ மூலம் உரையாற்றினார். அதில், பாகிஸ்தான் பிரதமர், உள்துறை அமைச்சர், ராணுவ மேஜர் ஜெனரல் ஆகியோர் இணைந்து தன்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டினார்.
அதுமட்டுமின்றி, அவர்கள் மூவரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்யும்வரை தொடர்ந்து போராடும்படியும் தனது கட்சிகாரர்களை இம்ரான் கான் கேட்டுக்கொண்டார். தன் மீதான தாக்குதல் தொடர்பாக முறையான, சார்பற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்றும், அனைத்து விசாரணை அமைப்புகள் மேற்கூறிப்பிட்ட மூவரின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ