திருமண ஆவணப்படத்தின் இரண்டு வருட இடைவெளி குறித்து முழு தகவலை உடைத்த நயன்தாரா , இந்த கடிதத்தில் நயன்தாரா நானும் ரௌடிதான் படம் மற்றும் அதன் தயாரிப்பாளர் தனுஷின் கேவல செயலை மூன்று பக்கத்திற்கு கழிவி ஊற்றிய நயன்தாராவின் ஆவேச பதிவை இங்குப் பார்க்கவும்..
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் ஆவண திரைப்படம் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும் இந்த நிலையில் திடீரென்று தனுஷ் குறித்துப் பதிவிட்ட கருத்துகள் அனைத்தும் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்கள் வட்டாரம் மற்றும் பிரபல நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன நயன்தாரா பதிவிட்டுள்ளார் என்பதை இங்குப் பார்க்கவும்.
சமீபத்தில் நானும் ரௌடிதான் படத்தின் 9 ஆண்டுகள் கடந்தது குறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சமூக வலைத்தளத்தில் தனுஷிற்கு நன்றி தெரிவித்து ‘ Always Greatful To You Dhanushkraja Sir ' 2என்று விக்னேஷ் சிவன் சமூகவலைத்தளத்தில் ஸ்டோரில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் 2022 ஆம் ஆண்டில் ஜூன் 9 தேதி மிகப் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து 2 இரண்டு வருடங்களான நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு திருமண ஆவணப்படம் நெட்ஃபில்க்ஸில் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.
நயன்தாரா இத்தனை வருடங்கள் இல்லாமல் எதற்கு தற்போது திருமண ஆவணப்படம் வெளியிட வேண்டும் என்று ரசிகர்களிடையே பல கேள்விகள் எழுந்தது. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக இன்று நயன்தாரா 3 பக்கங்களுக்கு விளாவரிவாக விளக்கம் அளித்துள்ளார். நயன்தாராவின் இந்த பதிவு தென்னிந்தியா திரைத்துறையில் பெரிய பேசுபொருளாக மாறியது. தனுஷ் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாகத் திரும்பியது.
நயன்தாரா திரைத்துறை ஆதரவு இல்லாமல் வந்தது குறித்தும் தனுஷ் திரைத்துறையின் ஆதரவில் வாழ்ந்துகொண்டு வருகிறார், அவரைப்போன்று எங்களிடம் எந்தவொரு பின்னணி ஆதரவும் இல்லை, தனுஷ் இந்த பலவீனத்தை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்த முயற்சிக்க பார்த்தார், ஆனால் அதற்கெல்லாம் கடவுள் ஒரு நாள் தீர்வு கொடுப்பார் என்று - நயன்தாரா கடும் கோவத்துடன் தனுஷை கிழித்துள்ளார்.
இந்த பதிவில் முக்கிய குறிப்பு என்னவென்றால் நயன்தாரா NetFlix ஆவணப்பட வெளியீட்டில் நானுன் ரௌடிதான் படத்தின் 3 வினாடி கொண்ட காட்சி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது, அந்த ஒரு வீடியோகாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டதாகவும். இதுக் குறித்து தனுஷிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் கேட்டதற்கு தனுஷ் அதற்கும் ஒத்துவரவில்லை என்றும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாராவும் மற்றும் விக்னேஷ் சிவனும் தனுஷின் ஒப்புதலுக்காக இந்த இரண்டு வருடங்கள் காத்திருந்ததாகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். தனுஷ் இரண்டு வருடங்கள் கழித்தும் அனுமதிக்க மறுத்ததால் தற்போதைய பதிப்பைக் கைவிட்டு அந்த குறிப்பிட்ட 3 வினாடி காட்சியைத் தவிர்த்து , ஆவணப்படத்தை மீண்டும் திருத்தி தீர்வு காணப்பட்டதாக நயன் தாரா ஆவேசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
நானும் ரவுடிதான் படத்தின் பாடல்கள் அனைத்தும் உண்மையான உணர்ச்சிகளிலிருந்து வந்தது. நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் பாடல்களுக்கும் அனுமதிக்கவில்லை அதற்கும் வாய்ப்பளிக்க தனுஷ் மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.நானும் ரௌடிதான் படத்தின் BTS காட்சிகள் மற்றும் ரூ.10 கோடி தொகையைக் கோரியது. வெறும் 3 வினாடிகளுக்கு 10 கோடி கேட்டது உங்களின் கேவலமான செயலை வெளிக்கொணர்ந்தது என்றும், நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சட்டப்பூர்வமான வழிகளில் பதிலடிகொடுப்பதாக கூறியுள்ளார். திருமண NetFlix ஆவணப்படத்திற்காக Naanum Rowdy Dhan கூறுகளைப் பயன்படுத்துவதற்கு தனுஷ் NOC வழங்க மறுப்பது பதிப்புரிமைக் கோணத்தில் நீதிமன்றத்திற்குக் கட்டாயம் நியாயப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
‘நானும் ரௌடிதான்’ படம் வெளியாகிக் கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், உலகத்தின் முன் முகமூடியை அணிந்துகொண்டு நடிகர் தனுஷ் கேவலமாகத் தொடர்வது நீண்ட நாட்களாகிவிட்டது. தனுஷ் தயாரிப்பாளராக மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று இன்றும் அனைவராலும் விரும்பப்படும் படம் என்று தனுஷ் கூறிய கொடூரமான விஷயங்கள் அனைத்தையும் நயன்தாரா மனதில் இன்றும் இருந்து வருகிறது. நானும் ரௌடிதான் படம் வெளியீட்டிற்கு முன் தனுஷ் சொன்ன வார்த்தைகள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மனதில் ஆறாத வடுக்களாக உள்ளது. நானும் ரௌடிதான் படம் பிளாக்பஸ்டர் ஆன பிறகு தனுஷ் இறுமாப்பு மிகவும் பாதிக்கப்பட்டது என்பதை நயன்தாரா திரைப்பட வட்டாரங்கள் மூலம் அறிந்ததாகக் கூறுகிறார்.
நயன்தாரா தனுஷை வணிகப் போட்டியைத் தவிர்த்து பொது வாழ்வில் உள்ள முக்கிய நபர்கள் பெரும்பாலும் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தொந்தரவு செய்வதில்லை. மரியாதை மற்றும் கண்ணியம் போன்ற விஷயங்களில் பெரிய மனதுடன் நடந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களோ, அல்லது சரியான மனசாட்சி உள்ள எவரும் இத்தகைய கொடுங்கோன்மையை, தனுஷைப் போன்ற ஆளுமையிலிருந்து வந்தாலும் பாராட்ட மாட்டார்கள் என்று நயன்தாரா நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.