சுடு தண்ணீர் vs குளிர்ந்த நீர் : குளிர் காலத்தில் எந்த தண்ணீரில் குளிக்கலாம்?

Winter Bathing Tips | குளிர் காலம் தொடங்கிவிட்ட நிலையில், இந்த சூழலுக்கு எந்த தண்ணீரில் குளித்தால் ஆரோக்கியமாக இருக்க முடியும், சுடு தண்ணீர், குளிர்ந்த நீர் இரண்டில் எதில் குளிக்கலாம்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 16, 2024, 08:07 AM IST
  • குளிர்காலத்தில் எப்படி குளிக்க வேண்டும்?
  • குளிர்ந்த நீரில் குளிக்கவே கூடாது
  • வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்
சுடு தண்ணீர் vs குளிர்ந்த நீர் : குளிர் காலத்தில் எந்த தண்ணீரில் குளிக்கலாம்?  title=

Winter Bathing Tips Tamil | குளிர் காலம் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் எந்த பக்கம் பார்த்தாலும் குளிர், பனி தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்ட நிலையில் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை. ஏனென்றால், குளிர் காலத்தில் தான் வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் மிக வேகமாக பரவி உயிர்கொல்லி நோய்களை ஏற்படுத்திவிடும். டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களும் இந்த காலத்தில் அதிகம் பரவும் என்பதால்ஆரோக்கியத்தில் தினசரி கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். கை, கால்களை எப்போதும் சுத்தமாக கழுவ வேண்டும். காலை மாலை இரு வேளைகளிலும் குளித்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட சுகாதாரமே உங்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.

அதேநேரத்தில் எந்த தண்ணீரில் குளிக்கலாம்? என்ற கேள்வி சிலருக்கு எழும். குளிர் காலம் தொடங்கிவிட்டதால் குளிர்ந்த நீரில் குளிப்பதை சிலர் பின்பற்றுவார்கள், சிலர் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதையே விரும்புவார்கள். ஆனால், எந்த தண்ணீரில் குளித்தால் நல்லது என்பதை இங்கே பார்க்கலாம். குளிர்காலத்தில் சரியான வெப்பநிலை உள்ள தண்ணீரில் குளிக்க வேண்டும். 

மேலும் படிக்க | குளிர் காலத்தில் சுடு தண்ணீரில் குளிக்க கூடாது!! ஏன் தெரியுமா?

குளிர்காலத்தில் ஏன் வெந்நீரில் குளிக்க வேண்டும்?

குளிர்காலத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலுக்கு தேவையான சூடு கிடைப்பதுடன், உடல் சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும். பல நேரங்களில், மக்கள் அதிக சூடு உள்ள வெந்நீரில் குளிக்கும்போது அதை நேரடியாக தலையில் ஊற்றிக் கொள்கிறார்கள். இது உங்களுக்கு ஆபத்தாக முடியும். அதிக சூடு உள்ள வெந்நீரில் குளித்தால் உங்கள் சருமம் வறண்டு போகும். வெந்நீர் உங்கள் உடலில் உள்ள இயற்கை எண்ணெயை அகற்றும். இன்னும் சில பிரச்சனைகளும் வர வாய்ப்பு இருக்கிறது. 

குளிர்ந்த நீர்

குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீர் குளிர்காலத்தில் குளிப்பதற்கு ஏற்றதல்ல. குளிர்ந்த நீரில் குளிப்பது குளிர்காலத்தில் குளிர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் உடலுக்கு குறிப்பிட்ட அளவு வெப்பநிலை தேவை. அதிக குளிர்ந்த நீரை ஊற்றும்போது உடல் தானாகவே சூட்டை உற்பத்தி செய்ய முயற்சிக்கும். அது உங்களின் ஆரோக்கியத்தில் கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

வெதுவெதுப்பான நீர்

குளிர்காலத்தில் குளிப்பதற்கு சிறந்த வழி வெதுவெதுப்பான நீர். இது அதிக சூடாகவோ குளிராகவோ இருக்கக்கூடாது. குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலுக்கு நிவாரணம் தருவதுடன் சோர்வையும் நீக்குகிறது. வெதுவெதுப்பான நீர் உடலின் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது தசைகளின் செயல்பாட்டுக்கு ஊக்கம் அளிக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இரத்த சர்க்கரை நோய் குறித்த சில கட்டுக்கதைகள்.... அவசியம் தெரிஞ்சுக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News