Gilgit-Baltistanஇல் மீண்டும் குள்ளநரித்தனத்தை காட்டும் பாகிஸ்தானின் சதி

ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானின் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்தியுள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2020, 11:04 PM IST
Gilgit-Baltistanஇல் மீண்டும் குள்ளநரித்தனத்தை காட்டும் பாகிஸ்தானின் சதி title=

இஸ்லாமாபாத்: கில்கிட்-பால்டிஸ்தானுக்கான அந்தஸ்தை முழு அளவிலான மாகாணமாக மாற்ற பாகிஸ்தான் (Pakistan) முடிவு செய்துள்ளது. இந்த செய்திகளை பாகிஸ்தான் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் வியாழக்கிழமையன்று செய்தி வெளியாகியிருக்கிறது.  யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானின் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

மே மாதத்தில் இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்திய இந்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தானின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உறுதியான மாற்றங்களைச் செய்யும் பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்த பகுதிகள் மீது பாகிஸ்தான் அரசாங்கத்துக்கோ அல்லது அந்நாட்டு நீதித்துறையோ எந்தவித அதிகாரமும் இல்லை என இந்தியா தெளிவுபட கூறியிருந்தது.

பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மீரின் பகுதிகளில் உறுதியான மாற்றங்களைச் செய்ய அந்நாடு மேற்கொண்ட முயற்சிகளையும், இதுபோன்ற நடவடிக்கைகளையும் இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாக அறிவித்தது. அதோடு, சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்த பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.

தற்போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைவில் இப்பகுதிக்கு வருகை தந்து Gilgit-Baltistan பகுதிக்கு முழு மாகாண அந்தஸ்தை வழங்குவதற்கான முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் விவகார அமைச்சர் Ali Amin Gandapur புதன்கிழமையன்று தெரிவித்தார். இதனையடுத்து, கில்கிட்-பால்டிஸ்தான் பகுதிக்கு அனைத்து அரசியலமைப்பு உரிமைகளும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய சட்டமன்றம், செனட் உள்ளிட்ட அனைத்து அரசியலமைப்பு அமைப்புகளிலும் கில்கிட்-பால்டிஸ்தானுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் Ali Amin Gandapur கூறினார். "அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னர், கில்கிட்-பால்டிஸ்தானுக்கு அரசியலமைப்பு உரிமைகளை வழங்க பாகிஸ்தான் அரசு கொள்கை அடிப்படையில் ஒப்புக் கொண்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.   

Trending News