முரப்பா நகரம் புதிய காபாவை உருவாக்கும் முயற்சி! சவுதியில் கிளம்பியுள்ள சர்ச்சை!

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் இஸ்லாமிய அமைப்புகளின் இலக்காகியுள்ளார். புனித 'காபா' போன்ற வடிவமைப்பிற்கு சமூக வலைதளங்களில் மக்கள் கோபத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருவதைக் காணலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 21, 2023, 03:48 PM IST
  • உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முராப்பா நகரத்தை சுற்றுலா மையமாக மாற்ற சவுதி அரேபியா விரும்புகிறது.
  • சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் மறு மேம்பாட்டுத் திட்டம் நடந்து வருகிறது.
  • சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் இஸ்லாமிய அமைப்புகளின் இலக்காகியுள்ளார்.
முரப்பா நகரம் புதிய காபாவை உருவாக்கும் முயற்சி! சவுதியில் கிளம்பியுள்ள சர்ச்சை! title=

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் மறு மேம்பாட்டுத் திட்டம் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், முராப்பா என்ற புதிய நகரத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நகரின் நடுவில் ஒரு பெரிய கன சதுரம் போன்ற கட்டிடம் இருக்கும். அது முழு நகரத்தின் மையமாக இருக்கும். இந்த வடிவமைப்பில் முஸ்லிம் சமூகம் கடும் கோபத்தில் உள்ளது. இது புதிய காபாவைக் கட்டும் முயற்சி என்றும், இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

புனித 'காபா' போன்ற வடிவமைப்பு

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் இஸ்லாமிய அமைப்புகளின் இலக்காகியுள்ளார். புனித 'காபா' போன்ற வடிவமைப்பிற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் மக்கள் கோபத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருவதைக் காணலாம் . உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த நகரத்தை சுற்றுலா மையமாக மாற்ற சவுதி அரேபியா விரும்புகிறது. இந்த திட்டத்தின் மிக அழகான காட்சிகள்  வெளியாகிய நிலையில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பலர் அதிருப்தியுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இஸ்லாமிய அமைப்புகளின் கோபத்திற்கான காரணம்

புதிய நகரத்தை வடிவமைக்கும் முடிவால் இஸ்லாமிய அமைப்புகள் கடும் கோபத்தில் உள்ளன. 'முகாப்' அல்லது கியூப் போன்ற கட்டமைப்பு தொடர்பாக கடுமையான விவாதம் உள்ளது. மெக்கா இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படுகிறது. அங்கே காபா உள்ளது.  தற்போது வடிவமைக்கப்படும் புதிய நகரத்தில் உள்ள புதிய வடிவமைப்பின் வடிவமும் காபாவை ஒத்திருக்கிறது. எனவே இந்த முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

மேலும் படிக்க | பாகிஸ்தான் எல்லை பகுதியை மூடிய தாலிபான்... சிக்கலில் பாகிஸ்தான்!

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீதான விமர்சனம்

வியாழன் அன்று, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் புதிய நகரின் மேம்பாட்டி திட்டத்தை தொடங்குவதாக அறிவித்தார். உலகின் மிகப்பெரிய நவீன நகரத்தை ரியாத்தில் உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ், ரியாத்தின் வரலாற்று சிறப்புமிக்க அல்-முரப்பா 'தி ஸ்கொயர்' கட்டப்படும் என கூறினார்.

காபாவைப் போன்ற வடிவமைப்பு

அதன் அமைப்பு ஒரு கன சதுரம் போன்றது. காபாவைப் போன்ற வடிவமைப்பிற்கு இஸ்லாமிய மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் உள்ளன. பழைய நகரமான ரியாத்தில் உள்ள மன்னர் அதுலாஜிஸின் புகழ்பெற்ற கட்டிடமான முராப்பா அரண்மனை ஒரு அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. 

நியூ முராப்பா நகரம்

அரபு செய்திகளில் வெளியான ஒரு அறிக்கையில், நியூ முராப்பாவில் ஒரு அருங்காட்சியகம், தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் இருக்கும். இங்கு பல்நோக்கு தியேட்டர் மற்றும் பிற பொழுதுபோக்கு திட்டங்கள் இருக்கும். இங்கு பல கலாச்சார இடங்கள் இருக்கும் மற்றும் பசுமைக்கு கவனம் செலுத்தப்படும்.

திட்டத்தில் உண்டாகியுள்ள குழப்பம் 

புதிய முராப்பாவின் சர்ச்சைக்குரிய கட்டிடம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இது 400 மீட்டர் உயரமும், 400 மீட்டர் அகலமும், 400 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும். இந்த கட்டிடம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதன் அமைப்பு ஒரு கனசதுர வடிவில் இருக்கும். க்யூப் வடிவ கட்டிடம் ஆளும் அல்-சவுத் வம்சத்தின் 'நஜ்தி கட்டிடக்கலை பாணியால்'  உருவானதாக இருக்கும். நியூயார்க்கின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் அளவிலான 20 கட்டிடங்கள் வரை என்ற அளவில் பிரம்மாண்டமாக இருக்கும். அதன் மையத்தில் ஒரு பெரிய சுழல் கோபுரம் இருக்கும். காபாவை  போன்று இருப்பது தான் முஸ்லிம்களை கோபப்படுத்தியுள்ளது. எனவே இந்த புதிய நகர திட்டத்திபால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாகிஸ்தான் சென்ற இந்திய குரங்குக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! கை விரிக்கும் வனத்துறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News