அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் பால் பீட்டிக்கு "மான் புக்கர்" விருதைப் பெற்றுள்ளார். "மான் புக்கர்" விருது உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலை தேர்வு செய்ய தலைநகர் லண்டனில் ஐந்து நீதிபதிகளை கொண்ட தேர்வு குழுவினர் 155 நாவல்களை வாசித்து, அவற்றில் 6 நாவல்களை இறுதிச்சுற்று போட்டிக்கு தேர்வு செய்தனர். மேன் புக்கர் பரிசு குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி, லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கில்ட் ஹாலில் நடைபெற்றது. இந்த நாவலுக்கு நேற்று லண்டன் நகரில் நடைபெற்ற விழாவில் கார்ன்வால் இளவரசி கமிலா பார்க்கர் மான் புக்கர் பரிசுடன் 50 ஆயிரம் பவுண்டுகளை ரொக்கமாக வழங்கினார். மேலும் மேன் புக்கர் பரிசை பெறும் முதல் அமெரிக்கர் என்ற பெருமையை பால் பீட்டி பெற்றுள்ளார்.