Sex Tourism: பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான ‘5’ நாடுகள்..!!

பாலியல் சுற்றுலா மற்றும் விபச்சார விடுதிகள் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளன. மாலுமிகள் செல்லும் இடங்களில் எல்லாம் விபச்சார விடுதிகளும் அதிகரித்து வருவதாக,  18 ஆம் நூற்றாண்டிலிருந்து,  கூறப்படும் புகார் ஆகும். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 23, 2022, 02:20 PM IST
  • ஸ்பெயினில் விபச்சாரம் சட்டவிரோதமானது அல்ல.
  • பாலியல் சுற்றுலா மற்றும் விபச்சார விடுதிகள் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளன.
  • 'ஐரோப்பாவின் விபச்சார விடுதி' என அழைக்கப்பட்ட ஸ்பெயின்
Sex Tourism: பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான ‘5’ நாடுகள்..!! title=

பாலியல் சுற்றுலா மற்றும் விபச்சார விடுதிகள் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளன. மாலுமிகள் செல்லும் இடங்களில் எல்லாம் விபச்சார விடுதிகளும் அதிகரித்து வருவதாக,  18 ஆம் நூற்றாண்டிலிருந்து,  கூறப்படும் புகார் ஆகும். உலகில் இன்னும் பல நாடுகளில் பாலியல் சுற்றுலா மிக பிரபலமாக உள்ளது. இந்த நாடுகளில் பாலியல் தொழிலாளர்களாக பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் உள்ளனர். சில நாடுகளில் இதற்கென தனிப்பட்ட பகுதிகள், சிறப்புச் சட்டங்கள் உள்ளன. பலியல் சுற்றுலா அல்லது செக்ஸ் டூரிஸத்திற்கு பெயர் பெற்ற நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1.  'ஐரோப்பாவின் விபச்சார விடுதி'  என அழைக்கப்பட்ட ஸ்பெயின்

கால்பந்திற்கு பிரபலமான ஸ்பெயின் மிக அழகான இடம். சாகச விளையாட்டுகள் மற்றும் பாலியல் சுற்றுலா என சுற்றுலாப் பயணிகளிடையே மிக பிரபலமானது. ஸ்பெயினில் விபச்சாரம் சட்டவிரோதமானது அல்ல. இதற்கென தனி சட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், ஸ்பெயினில் பாலியல் தொழிலாளர்களின் தரகர் அல்லது இடைத்தரகர் வடிவில் பணம் சம்பாதிக்க முடியாது. அங்கு அவ்வாறு செய்வது சட்டவிரோதமானது. ஸ்பெயினில் அதிக எண்ணிக்கையிலான விபச்சார விடுதிகள் இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. ஐரோப்பிய நாடுகளை விட காஸ்ட் அப் லிவின்ஃப் எனப்படும் வசிப்பதற்கான செலவும் குறைவு. இது தவிர, ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலிருந்தும் இங்கு செல்வது மிகவும் எளிதானது.

 

2. நெதர்லாந்த்

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் பல நூற்றாண்டுகளாக பல விபச்சார விடுதிகள் இயங்கி வருகின்றன. நவீன கால ஆட்சியாளர்களும் இதற்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. ஒவ்வொரு மாலையும் இங்குள்ள சந்தை வண்ன விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். ஆம்ஸ்டர்டாமில், ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஆசிய நாடுகளில் இருந்து பல பெண்கள் பாலியல் தொழிலாளிகளாகவும் பணிபுரிகின்றனர். நெதர்லாந்து அரசும் பாலியல் தொழிலாளர்களைப் பாதுகாக்க சட்டங்களை இயற்றியுள்ளது. இதுதவிர, உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையினரும்  அவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளனர்.

3. ஆசியாவின் செக்ஸ் தலைநகரான தாய்லாந்து  என்று அழைக்கப்படுகிறது

கடந்த இரண்டு தசாப்தங்களில், தாய்லாந்தின் பல நகரங்கள், பாலியல் சுற்றுலாவின் பெரிய மையங்களாக மாறிவிட்டன. தாய்லாந்தில் விபச்சாரம் சட்டவிரோதமானது அல்ல. 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேச அறிக்கையில், பாங்காக்கிற்கு வருபவர்களில் 70% பேர் பாலியல் சுற்றுலாவிற்காக வருவதும் தெரியவந்துள்ளது.

4. கம்போடியா

கம்போடியாவில் விபச்சாரம் சட்டவிரோதமானது, ஆனால் இங்கு பாலியல் தொழிலாளர்கள் அதிகம் உள்ளது. அதன் பெரிய நகரங்கள் மற்றும் பிரபலமான சுற்றுலா தலங்களில் மிக அதிக அளவில் காணலாம். .பாலியல் சுற்றுலாவைப் பொறுத்தவரை கம்போடியா தாய்லாந்தை விட மிகவும் மலிவானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

5. கரீபியன் தீவுகள் 

கரீபியன் தீவுகளின் அழகின் காரணமாக, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆண்டு தோறும் இங்கு வருகிறார்கள். ஜமைக்கா, பார்படாஸ் மற்றும் டொமினிகன் குடியரசு போன்ற தீவுகள் பாலியல் சுற்றுலாவிற்காக புகழ் பெற்றது. இங்கு பெண்களுடன் ஆண் பாலியல் தொழிலாளிகளும் உள்ளன. கரீபியன் நாடுகளில் விபச்சாரம் சட்டவிரோதமானது அல்ல. பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக சில சிறப்பு சட்டங்களும் உள்ளன.

ALSO READ | தாய்லாந்து போகப்போறீங்களா? உங்களுக்கு ஒரு முக்கியமான நல்ல செய்தி!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News