துருக்கியில் உள்ள ‘மர்ம’ கிரேக்க கோவில்; இங்கே போனவர் யாரும் திரும்பியதில்லை..!!

விந்தைகள் நிறைந்த உலகத்தில், நாம் கூர்ந்து கவனைத்தால், பல ஆச்சரியமான மர்மமான இடங்கள், நிகழ்வுகள் நடப்பதைக் காணலாம், அவை ஏதோ ஒரு காரணத்திற்காக மர்மமான இடங்களாக இருக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 27, 2021, 04:12 PM IST
  • கிரேக்க கடவுளின் விஷ காற்றின் சுவாசத்தால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் நம்பினர்.
  • மக்கள் இந்த கோவிலின் கதவை 'நரகத்தின் நுழைவாயில்' என்று அழைக்கிறார்கள்
  • அதற்குள் சென்ற ஒருவர் கூட திரும்பி வந்ததில்லை என கூறப்படுகிறது
துருக்கியில் உள்ள ‘மர்ம’ கிரேக்க கோவில்; இங்கே போனவர் யாரும் திரும்பியதில்லை..!! title=

விந்தைகள் நிறைந்த உலகத்தில், நாம் கூர்ந்து கவனித்தால், பல ஆச்சரியமான மர்மமான இடங்கள், நிகழ்வுகள் நடப்பதைக் காணலாம், அவை ஏதோ ஒரு காரணத்திற்காக மர்மமான இடங்களாக இருக்கின்றன.

அத்தகைய ஒரு இடம் துருக்கியின் பண்டைய நகரமான ஹீரபோலிஸில் உள்ளது. அங்கு மிகவும் பழமையான கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் ஒரு 'நரகத்தின் நுழைவாயில்' இருப்பதாகக் கூறப்படுகிறது, அதற்குள் அருகில் சென்ற ஒருவர் கூட திரும்பி வந்ததில்லை என கூறப்படுகிறது

இந்த கோயிலுக்குள் செல்லும் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் மற்றும் பறவைகள் கூட இறக்கின்றன என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த இடம் மர்மமாகவே இருந்தது, இங்கு வந்தவர்கள் கிரேக்க கடவுளின் விஷ காற்றின் சுவாசத்தால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் நம்பினர். இங்கு தொடர்ந்து இறப்பு நடப்பதால், மக்கள் இந்த கோவிலின் கதவை 'நரகத்தின் நுழைவாயில்' என்று அழைக்கிறார்கள். கிரேக்க, ரோமானிய காலங்களில் கூட, மரண பயம் காரணமாக இங்கு செல்ல மக்கள் பயந்தார்கள் என கூறப்படுகிறது.

ALSO READ | இறந்த பின் ஐஸ்பெட்டியில் நெடு நேரம் வைக்கப்பட்டவர் ‘குறட்டை’ விட்ட திகில் சம்பவம்

 

இருப்பினும், இந்த மர்மம் தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுவது வேறு விதமாக உள்ளது. கோயிலுக்கு அடியில் இருந்து விஷ கார்பன் டை ஆக்சைடு வாயு தொடர்ந்து வெளியேறி வருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர், இதன் காரணமாக மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் இந்த கோவிலுக்கு செல்வதால் இறக்கின்றனர் எனக் கூறுகிறார்கள்.

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில், கோயிலின் கீழ் கட்டப்பட்ட குகையில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 10 சதவிகிதம் கார்பன் டை ஆக்சைடு இருந்தால் ஒரு நபர் வெறும் 30 நிமிடங்களில் இறக்கலாம், இங்குள்ள குகைக்குள் இருக்கும் இந்த விஷ வாயுவின் அளவு 91 சதவீதம்.

ஆச்சரியம் என்னவென்றால், குகைக்குள் இருந்து வெளியே வரும் நீராவியினால், இங்கு வரும் பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் கொல்லப்படுகின்றன.

இந்த இடம் முற்றிலும் நீராவியால் நிரம்பியிருப்பதால் புலப்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது எனவும் கூறுப்படுகிறது.  இதன் காரணமாக இங்கு நிலம் அரிதாகவே தெரியும்.

ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News