டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3 நாள் பயணமாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அதன் நினைவாக இந்த பயணம் ஆகும். மேலும் இதனுடன் இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை.
இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார். தொடர்ந்து மோடி ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து நடந்த விழாவில் பேசிய இஸ்ரேல் பிரதமர்:-
இந்திய பிரதமர் எங்களின் நாட்டிற்கு வருவதற்கு நாங்கள் 70 ஆண்டுகள் காத்திருந்தோம் என இந்திய பிரதமர் மோடி குறித்து பெருமிதமாக பேசினார். இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம். இந்திய கலாச்சாரம், வரலாறு, ஜனநாயகம், எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பிரதமர் மோடி எனது நண்பர், அவரை வரவேற்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். 70 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது. மிகச்சிறந்த பெரும் மற்றும் நல்ல தலைவர்களில் ஒருவர் மோடி. மேக் இன் இந்தியா என்பதுடன் நாங்கள் , மேக் வித் இந்தியா என இருக்கிறோம். நமது உறவுக்கு வானம் எல்லை இல்லை. இன்னும் நமது உறவுகள் விரிவாக்கம் பெறும்.
இவ்வாறு பெஞ்சமின் பேசினார்.
அவரை தொடர்ந்தது இந்திய பிரதமர் மோடி பேசியதாவது:-
எனக்கு இங்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது இஸ்ரேல் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரேல் பழமையான கலாச்சார நாடாக இருந்த போதிலும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொண்டது. இளம் நாடு இந்தியா. இஸ்ரேல் வந்தது குறித்து பெருமை அடைகிறேன். \\
மேலும் பயங்கரவாதம் உள்ளிட்ட சவால்களிலிருந்த நாடுகளை பாதுகாக்க வேண்டும் இந்தியாவின் வளர்ச்சியில் இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது. இஸ்ரேல் இந்தியாவின் மிக நெருங்கிய கூட்டாளியான நாடு. இரு நாடுகளுடன் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.