இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இடையே, வியாழக்கிழமை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உதவியுடன் இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை இயல்பாக்க வழிவகுக்கும்.
டிரம்ப் தனது டிவிட்டரில், "இன்று வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு ஏற்பட்டுள்ளது! எங்கள் இரு முக்கிய நண்பர்களான இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது !" என பதிவு செய்தார்
இந்த வரலாற்று சிறப்பு மிக்க, ராஜீய நிலையிலான முக்கிய ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அபுதாபியின் இளவரசர் ஷீல்ச் முகமது பின் சயீத் ஆகிய மூன்று தலைவர்களின் தைரியமான இராஜதந்திரத்திற்கு ஒரு சான்று என்று ஒரு கூட்டு அறிக்கை கூறியுள்ளது. பிராந்தியத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் உதவிடும் என கூறப்படுகிறது.
"மூன்று நாடுகளும் பல பொதுவான சவால்களை எதிர்கொள்கின்றன, இன்றைய வரலாற்று சிறப்பு மிக்க ஒபந்தத்தில் பரஸ்பரம் இரு நாடுகளும் பயனடையும். முதலீடு, சுற்றுலா, விமான போக்குவரத்து, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், பரஸ்பரம் தூதரகங்களை நிறுவுதல் ஆகியவை இதில் அடங்கும். மத்திய கிழக்கின் இரு ஆற்றல்மிக்க நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் " என ஒப்பந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | அட்லாண்டிக் பெருங்கடலின் கீழ் அரிய பூமராங் பூகம்பம்.. விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!
அந்த அறிக்கையில், "ஒன்றாகச் செயல்படுவதன் மூலம் முஸ்லீம், யூத மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் வளர்ச்சியை ஏற்படுத்தலாம். அமெரிக்காவுடன், இஸ்ரேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பிராந்தியத்தில் உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஒரே விதமான கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்கின்றன , அத்துடன் இராஜதந்திர ஈடுபாடு, மேம்பட்ட பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு, இரு நாடுகளும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் " என கூறப்பட்டுள்ளது,
"இன்றைய ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல் மற்றும் பிராந்திய மக்களுக்கு சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும். 2020 ஜனவரி 28 அன்று நடைபெற்ற வெள்ளை மாளிகை வரவேற்பறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தோன்றியதை அமெரிக்காவும் இஸ்ரேலும் நன்றியுடன் நினைவு கூர்கின்றன. அதிபர் டிரம்ப் தனது சமாதானத்திற்கான பார்வையை முன்வைத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்பான ஆதரவு அறிக்கைகளுக்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கிறார். இஸ்ரேல்-பாலஸ்தீனிய மோதலுக்கு ஒரு நியாயமான, விரிவான மற்றும் நீடித்த தீர்மானத்தை அடைவதற்கு கட்சிகள் இந்த விஷயத்தில் தங்கள் முயற்சிகளைத் தொடரும். சேர்க்கப்பட்டது.
ALSO READ | Brazil-லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கனில் கொரோனா வைரஸ்: சீனா பகீர் தகவல்!!
"சமாதானத்திற்கான முயற்சியில், சமாதான உணர்வுடன் வரும் அனைத்து முஸ்லிம்களும் அல் அக்ஸா மசூதிக்குச் சென்று பிரார்த்தனை செய்யலாம், மேலும் ஜெருசலேமின் பிற புனித இடங்கள் அனைத்தும், எல்லா மதங்களிலும் உள்ள அமைதியை விரும்புபவர்களுக்காக திறந்திருக்கும். பிரதமர் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் ஷீல்ச் முகமது பின் இருவரும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள சிறப்பான அணுகுமுறை குறித்து தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.