இந்தியாவில் இருந்து கர்தார்பூர் வரும் யாத்ரீகர்கள் கடவுச்சீட்டு கொண்டு வரவேண்டியது அவசியம் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்!
எதிர்வரும் நவம்பர் 12-ஆம் தேதி குருநானக்கின் 550-வது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், கர்தார்பூர் நடைபாதை நவம்பர் 9-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இந்த நடைபாதை இந்தியாவின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் சன்னதியை பாகிஸ்தானின் கர்த்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுடன் இணைக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இந்திய யாத்ரீகர்களுக்கு தெரிவிக்கையில்., இந்திய யாத்ரீகர்கள் கடவுசீட்டு கொண்டிருத்தல் அவசியம் இல்லை, ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ அடையாள அட்டை கொண்டிருந்தால் போதுமானது. அதேப்போல் கர்தார்பூர் வரும் யாத்ரீகர்கள் 10 நாட்கள் முன்பு முன்பதிவு செய்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. கர்தார்பூர் வரும் யாத்ரீகர்களுக்கு $20 அமெரிக்க டாலர் விலக்கு அளிக்கப்படுகிறது, ஆனால் இந்த விலக்கு இரண்டு நாட்களுக்கு மட்டுமே. ஒன்று பாதையின் திறப்பு தினம் அன்று, மற்றொன்று குருநானக் பிறந்த நாள் அன்று என குறிப்பிட்டுள்ளார்.
For Sikhs coming for pilgrimage to Kartarpur from India, I have waived off 2 requirements: i) they wont need a passport - just a valid ID; ii) they no longer have to register 10 days in advance. Also, no fee will be charged on day of inauguration & on Guruji's 550th birthday
— Imran Khan (@ImranKhanPTI) November 1, 2019
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., கர்தார்பூர் வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு நான் இரு சலுகைகளை அறிவித்தள்ளேன், அதன்படி, யாத்ரீகர்களிடம் ஏதேனும் ஒரு ஆவணச்சீட்டு இருந்தால் மட்டும் போதுமானது, கடவுச்சீட்டு(Passport) தேவையில்லை.
அதுபோன்று யாத்திரை வரும் யாரும் 10 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. மேலும் அவர்கள் யாரிடம் இருந்தும் யாத்திரையின் முதல் நாள்(நவ., 9) மற்றும் குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம்(நவ., 12) ஆகிய இரு நாட்களுக்கு மட்டும் எவ்வித கட்டணத் தொகையும் வசூலிக்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்தார்பூர் சாஹிப் தாழ்வாரத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இந்தியா அக்டோபர் 24-ஆம் தேதி பாகிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த வழித்தடத்தின் மூலம் இந்தியர்கள் விசா இல்லாமல் கர்தார்பூர் சென்று வரலாம். அதன்பின், பரஸ்பர உடன்பாட்டின் பேரில் இது மேலும் நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கர்த்தார்பூர் நடைபாதை வழியாக குருத்வாரா கர்த்தார்பூர் சாஹிப்பிற்கு தொடக்க யாத்திரையில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்ட 575 யாத்ரீகர்களின் பட்டியலை இந்தியா செவ்வாய்க்கிழமை பகிர்ந்து கொண்டது. அந்த பட்டியலில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்பத் கவுர், பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங், பஞ்சாப் எம்பி-க்கள், எம்,எல்.ஏக்கள் உட்பட மொத்தம் 575 நபர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் முதல் யாத்ரீகர்கள் குழு நவம்பர் 9-ஆம் தேதி அண்டை நாட்டிற்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.