உலகின் கோடீஸ்வரர் எலான் மஸ்கிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள இந்திய அமெரிக்க மாணவர்..!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கிற்கு எதிராக இந்திய அமெரிக்க மாணவர் ரன்தீப் ஹோதி அவதூறு வழக்குத் தொடுத்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 29, 2021, 03:25 PM IST
  • கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள இந்திய மாணவர்.
  • இந்திய மாணவர் ரன்தீப் ஹோதி, எலான் மஸ்க் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
  • டெஸ்லா நிறுவன தலைவரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
உலகின் கோடீஸ்வரர் எலான் மஸ்கிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள இந்திய அமெரிக்க மாணவர்..! title=

உலகின் மிகப்பெரிய பணக்காரர் கோடீஸ்வரர் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரரான எலோன் மஸ்க்கிற்கும் ( Elon Musk) ஒரு இந்திய அமெரிக்க மாணவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது . எலோன் மஸ்க் மீது இந்திய மாணவர் ரன்தீப் ஹோதி மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் ரன்தீப் ஹோதி அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர்.

ரன்தீப் ஹோதி தொடுத்த வழக்கின் மீதான விசாரணையில், கலிபோர்னியா நீதிபதி ஒருவர் தனது வழக்கு ஆதாரமற்றது என்ற மஸ்க்கின் (Elon MUsk) வேண்டுகோளை நிராகரித்தார், மேலும்  தொழில்முனைவோரின் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது. ரந்தீப் ஹோதி ட்விட்டரில் "@skabooshka" என்ற பெயரில் கணக்கு வைத்துள்ளார். 

பிப்ரவரி 2019 இல் முதல் முறையாக, ரன்தீப் ஹோதி பாதுகாப்புப் படையினருடன் சண்டையிட்டார். ரன்தீப் கலிபோர்னியாவின் டெஸ்லாவில் உள்ள ஒரு விற்பனை மையத்திற்குச் சென்றிருந்த போது இந்த சம்பவம் நேர்ந்தது. இரண்டாவது சம்பவம் 2019 ஏப்ரலில் நடந்தது. ஹோதி தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது, டெஸ்லாவின் (Tesla) டெஸ்ட் டிரைவ் காரைப் பார்த்த உடன் அதன் புகைப்படத்தை எடுத்து ஆன்லைனில் வெளியிட்டார். 

ஹோதியின் இந்த புகைப்படம் தொடர்பாக ஒரு ஆன்லைன் எடிட்டருக்கு மஸ்க் மின்னஞ்சல் அனுப்பினார், அவர் கூறுவது பொய் என்று என்றும் டெஸ்லாவின் விற்பனை மையத்திலிருந்து செல்லும் போது எங்கள் ஊழியர்களைக் தாக்கினார் என்றும் கூறினார்.

ALSO READ |  Elon Musk அளிக்கும் 730 கோடி ரூபாய் பரிசு வேண்டுமா? அதற்கு இதை செய்தால் போதும்

தனக்கு எதிராக மஸ்க் ஒரு ஆன்லைன் வெறுப்பு பிரச்சாரத்தை நடத்தியதாகவும், ஆகஸ்ட் மாதம் அவருக்கு எதிராக அலமேடா கவுண்டி உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்ததாகவும் ஹோதி கூறியுள்ளார். இது அவரது கருத்து சுதந்திரம் தொடர்பான பிரச்சினை என்றும் எனவே ஹோதியின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் மஸ்க் வாதிட்டார். எலான் மஸ்கின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார். ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி எலான் மஸ்க் தற்போது. 199 பில்லியன் டாலர் சொத்துக்களை கொண்ட உலகின் பெரும் பணக்காரர்.

ALSO READ | இனி விண்வெளி பயணத்துக்கும் Uber புக் செய்யலாம்: அசத்தும் Elon Musk

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News