‘கம்யூனிஸத்தால் வீழ்ந்தோம்’; உணவுக்காக வீதியில் போராடும் கியூபா மக்கள்

சர்வாதிகாரம் உள்ள நாட்டில், மக்களை காவல்துறையினர் உன்னிப்பாகக் கண்காணிக்கும் ஒரு நாட்டில் போராட்டங்கள் மிகவும் அரிது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 12, 2021, 01:09 PM IST
  • கியூபா அரசு போராட்டக்காரர்களை அடக்க, பெரிய அளவில் அடக்குமுறையை கையாண்டு வருகிறது.
  • அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை கியூபாவிற்கு எச்சரிக்கை விடுத்தார்.
  • கியூபாவில் 1950 களில் சர்வாதிகாரம் தொடங்கியதிலிருந்து அங்கு முதன் முதலாக மிகப்பெரிய போராட்டம் ஆகும் .
‘கம்யூனிஸத்தால் வீழ்ந்தோம்’; உணவுக்காக வீதியில் போராடும் கியூபா மக்கள்  title=

கம்யூனிஸ ஆட்சி நடைபெறும் கியூபாவில் (Cuba) கடும் உணவுப் பஞ்சம் காரணமாக மக்கள் வீதிக்கு வந்து தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  மேலும் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் எனவும் வீதியில் இறங்கியுள்ளனர்.

மக்கள், ‘கம்யூனிஸத்தால் வீழ்ந்தோம்’, "நாங்கள் பயப்படவில்லை!"  “சுதந்திரம்! சுதந்திரம்! ” என கோஷமிடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியது. 

சர்வாதிகாரம் உள்ள நாட்டில், மக்களை காவல்துறையினர் உன்னிப்பாகக் கண்காணிக்கும் ஒரு நாட்டில் போராட்டங்கள் மிகவும் அரிது.  இந்நிலையில், கியூபா மக்கள் பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளதன் மூலம், மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.   

ALSO READ | தலிபான்கள் வசமாகும் ஆப்கானிஸ்தான்; இந்திய தூதரகம் மூடப்பட்டதா..!!

சோவியத் யூனியன் (Soviet Unioin) உடைந்ததை அடுத்து உருவான தீவு தற்போது, மிகப்பெரிய சமூக பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. அத்துடன் கொடிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளும் அதிகரித்துள்ளன.

கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோயின் மூன்றாவது அலை, உணவு பஞ்சம், மருந்துகள் மற்றும் பிற தேவைகளின் பயங்கர பற்றாக்குறை போன்ற மோசமான நிலைமைகள் ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களில் ஒன்றாகும்.  கியூபாவில் 1950 களில் சர்வாதிகாரம் தொடங்கியதிலிருந்து அங்கு முதன் முதலாக மிகப்பெரிய போராட்டம் ஆகும் .

அந்நாட்டு அரசு போராட்டக்காரர்களை அடக்க, பெரிய அளவில் அடக்குமுறையை கையாண்டு வரும் நிலையில், அமெரிக்கா கியூபாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை எதிர்த்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை கியூபாவிற்கு எச்சரிக்கை விடுத்தார்.

"கியூபாவில் கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா ஆதரிக்கிறது, மக்கள் மீதான் எந்தவொரு வன்முறையையும், அமைதியான போராட்டக்காரர்களை குறிவைத்து நடத்தப்படும் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிற்து" என்று அவர் ட்விட்டரில் (Twitter) தெரிவித்தார்.

ALSO READ | Piercing: 15 வயது பள்ளி சிறுமியின் உயிருக்கு எமனான பேஷன்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News