இடர்பாடுகளை ஏற்படுத்திய 'இடா'! தத்தளிக்கும் அமெரிக்கா!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் 'இடா' புயல், தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2021, 03:08 PM IST
இடர்பாடுகளை ஏற்படுத்திய 'இடா'! தத்தளிக்கும் அமெரிக்கா! title=

நியூயார்க்:  அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் 'இடா' புயல், தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கனமழைக்கு 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூசியானாவில் 'இடா' புயல் காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் அருவியாக ஓடியது. லூசியானா, மிஸ்ஸிசிப்பியில் இந்த புயல் ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய 5-வது சக்தி வாய்ந்த சூறாவளியாக இந்த 'இடா' கருதப்படுகிறது.

ida

புயல் பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைக்குள் கனமழை கொட்டும் காட்சியும், அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரெயில் சேவை வந்து போகும் காணொளியை உள்ளூர் மக்கள் பகிர்ந்துள்ளனர்.  இந்நிலையில், நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும் வெளியிடங்களிலும் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன.

தற்போது நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது. கொடூரமான வகையில் ஓடும் வெள்ளத்தால் நகர சாலைகள் படுபயங்கர நிலையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.  இதனால் நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தினால் நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.மக்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News