புதுடெல்லி: "தங்கள் மனதையும் சக்தியையும் போருக்குத் தயார்படுத்துமாறு" அக்டோபர் 13ஆம் தேதியன்று சீன அதிபர் Xi Jinping அழைப்பு விடுத்துள்ளார் என சீன செய்தி நிறுவனமான Xinhuaவை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது
சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் போருக்குத் தயாராகுமாறு மக்கள் விடுதலை ராணுவத்தை (the People's Liberation Army (PLA)) கேட்டுக் கொண்டதாக புதன்கிழமையன்று சி.என்.என் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 13ஆம் தேதியன்று குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில் உள்ள ராணுவத் தளம் ஒன்றிற்கு பயணம் மேற்கொண்ட சீன அதிபர், "அனைவரும், தங்கள் மனதையும் சக்தியையும் போருக்குத் தயார்படுத்துங்கள்" என்று ஜின்பிங் அழைப்பு விடுத்ததாக சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவை மேற்கோள் காட்டி சிஎன்என் தெரிவித்துள்ளது.
Read Also | சீனாவின் எதிர்ப்பை மீறி தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்ட இந்திய போர்க்கப்பல்...!!!
பி.எல்.ஏ-வின் Marine Corps அவர் ஆய்வு செய்தபோது சீன அதிபர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார். ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (Shenzhen Special Economic Zone) 40 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் புதன்கிழமை உரை நிகழ்த்துவதற்காக குவாங்டாங்கிற்கு ஷி சென்றிருந்தார். 1980 இல் நிறுவப்பட்டது இந்த பொருளாதார மண்டலம், சீனாவின் பொருளாதார நிலை சர்வதேச அளவில் உயர்ந்து, உலகின் இரண்டாவது மிகப்பெரியதாக மாற உதவுவதில் முக்கிய பங்கு வகித்தது.
கிழக்கு லடாக்கில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் (LAC) இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றங்கள் நிலவுவதற்கு மத்தியில் தற்போது சீன அதிபரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
செவ்வாயன்றுதான், இந்தியாவும், சீனாவும், சுமார் 11 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், துருப்புகளை எல்லைப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்வதற்கான தீர்வை பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முடிவு செய்ய ஒப்புக்கொண்டன. எல்.ஓ.சி.யில் நிலைமையை சரியாக்குவதற்கு ஒப்புக்கொண்டன. சீனாவிற்கும் இடையிலான 7 வது கார்ப்ஸ் கமாண்டர் மட்டக் கூட்டம் அக்டோபர் 12 (திங்கட்கிழமை) இரவு 11:30 மணியளவில் தான் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"அக்டோபர் 12 ஆம் தேதி, இந்தியா மற்றும் சீனாவின் மூத்த தளபதிகள் நிலை கூட்டத்தின் 7 வது சுற்று பேச்சுவார்த்தை சுஷூல்-இல் (Chushul) நடைபெற்றது. இந்த விவாதங்கள் நேர்மறையானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இருந்தன. இது பரஸ்பர புரிதலை மேம்படுத்தியது.
Read Also | இந்திய சீன துருப்புகளுக்கு இடையில் லடாக்கின் பேங்காங் பகுதியில் மோதல் வெடித்தது..!!
இதற்கிடையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்டோபர் 13ஆம் தேதியன்று சீனாவின் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் சில பாலங்களை திறந்து வைத்தார். அதன்பிறகு இந்தியாவை தாக்கிப் பேசிய சீனா, "எல்லையில் இராணுவப் பணிகளை முடுக்கி விடுகிறது" என்று குறை கூறியிருந்தது. அதுமட்டுமல்ல, இந்தியா இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்துவதாக அது மேலும் குற்றம் சாட்டியது.
மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளுக்கு அருகிலுள்ள முக்கிய பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்களை இணைக்கும் முயற்சியாக தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பாலங்களின் மொத்த எண்ணிக்கை 44. (ஜம்மு-காஷ்மீர் (10), லடாக் (08), இமாச்சல பிரதேசம் (02), பஞ்சாப் (04), உத்தரகண்ட் (08), அருணாச்சல பிரதேசம் (08), சிக்கிம் (04))
ஆனால், லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை அங்கீகரிக்க மறுக்கும் சீனா, இந்தியா தனது எல்லைக்குள் கட்டியுள்ள பாலங்கள் தொடர்பாக பிரச்சனையை எழுப்பியது. "இரு தரப்பினருக்கும் இடையிலான பதட்டத்திற்கு இந்தியக் காரணம், எல்லையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை அதிகரிக்கும் இந்தியா, இராணுவ நடவடிக்கைகளைப் படைகளை விரைவுபடுத்துகிறது" என்று சீனா கூறியிருந்தது.
Also Read | இந்திய சீன எல்லையில் பதற்றம், உயர் மட்ட கூட்டத்தை கூட்டியுள்ளார் பிரதமர் மோடி..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR