சீண்டிப் பார்க்கும் சீனா: தகுந்த பதிலடி கொடுத்த இந்தியா

வெள்ளிக்கிழமையன்று, தான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்குப் பெயர் சூட்டியதை நியாயப்படுத்திய சீனா, திபெத்தின் தெற்குப் பகுதி பண்டைய காலம் முதலே சீனாவின் பகுதியாக இருந்து வந்ததாகக் கூறியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 12:17 PM IST
சீண்டிப் பார்க்கும் சீனா: தகுந்த பதிலடி கொடுத்த இந்தியா title=

பெய்ஜிங்: சீனா தனது கீழ்த்தரமான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வதாக இல்லை போலும்!! தொடர்ந்து இந்தியாவை சீண்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீனா, தற்போதும் அப்படிப்பட்ட ஒரு கூற்றை வெளியிட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமையன்று, தான் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் மேலும் 15 இடங்களுக்குப் பெயர் சூட்டியதை நியாயப்படுத்திய சீனா, திபெத்தின் தெற்குப் பகுதி பண்டைய காலம் முதலே சீனாவின் பகுதியாக இருந்து வந்ததாகக் கூறியது. 

அருணாச்சல பிரதேசத்தில் (Arunachala Pradesh) உள்ள 15 இடங்களின் பெயரை சீனா மாற்றியதை இந்தியா வியாழக்கிழமை நிராகரித்தது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்திருக்கிறது என்றும் எப்போதும் இருக்கும் என்றும் புதுடெல்லி உறுதியாகக் கூறியது. பெயரை மாற்றுவதால் உண்மைகள் மாறாது என்றும் இந்தியா தெளிவுபடுத்தியது.

சீனா அருணாச்சலத்தை இந்தப் பெயர் கொண்டே அழைக்கிறது

இந்தியாவின் அறிக்கைக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் (Chinese Spokesperson Zhao Lijian), 'ஜங்னான் (சீனாவின் திபெத்தின் தெற்குப் பகுதி) சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியில் அமைந்துள்ளது. இது பண்டைய காலங்களிலிருந்து சீனாவின் எல்லையாக உள்ளது.’ என்று கூறினார். 

அருணாச்சல பிரதேசத்தை சீனா ஜங்னான் என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, திபெத்தின் தெற்குப் பகுதி சீனாவின் திபெத்திய (Tibet) தன்னாட்சிப் பகுதிக்கு சொந்தமானது என்றும், இது சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது என்றும் லிஜியாங் கூறியிருந்தார்.

ALSO READ | 8 நாட்களாக தொடரும் ஊரடங்கு: உணவின்றி தவிக்கும் சீன மக்கள் 

இதற்கு முன்பும் பெயரை மாற்ற முயற்சி

அந்த பகுதியில் பல்வேறு இன மக்கள் பல வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும், அந்த மக்கள் அப்பகுதிக்கு பல பெயர்களை வைத்துள்ளதாகவும் லிஜியன் மேலும் தெரிவித்தார். சீன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அந்தப் பகுதியின் தரப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்காக, சீனாவில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரிகள் தொடர்புடைய விதிமுறைகளின்படி தொடர்புடைய பகுதிக்கான பெயர்களை வெளியிட்டுள்ளனர். இவை சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்ட விஷயங்கள். " என்றார்.

இரண்டாவது முறையாக, அருணாச்சல பிரதேசத்தின் சில இடங்களுக்கு சீனப் பெயர்களை வைக்க சீனா முயற்சித்துள்ளது. இதற்கு முன் 2017-ல் ஆறு இடங்களுக்கு பெயர் வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அருணாச்சல பிரதேசத்திற்கு இந்திய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் வருவதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

'பெயர்களை மாற்றுவது உண்மைகளை மாற்றாது'

முன்னதாக, சீனாவின் கூற்று குறித்து, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இது குறித்த செய்திகளை நாங்கள் பார்த்தோம் என்று கூறினார். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்ற சீனா முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. 

சீனா (China) ஏப்ரல் 2017 இல் இந்த சில பெயர்களை மாற்ற முயன்றார். செய்தித் தொடர்பாளர் மேலும் கூறுகையில், “அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, எப்போதும் இருக்கும். அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றுவதால் இந்த உண்மை மாறாது.” என்றார்.

ALSO READ | திரிகோணமலை எண்ணெய் பண்ணை ஒப்பந்தம்; ‘சீன விரிகுடாவில்’ கால் பதிக்கும் இந்தியா..!!! 

ALSO READ | Corona prevention: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News