கொரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை தற்போது வரை 106 ஆக உயர்ந்துள்ளது.

Last Updated : Jan 28, 2020, 08:43 AM IST
கொரோனா வைரஸ்: சீனாவில் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு!! title=

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை தற்போது வரை 106 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் 2,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 461 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், மேலும் 1300 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

 

 

பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க சீன அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பது உட்பட அனைத்து திட்டங்களையும் இந்திய அரசாங்கமும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகமும் பரிசீலித்து வருகின்றன. கொரோனா வைரஸ் தொடர்பாக, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அமைத்துள்ள இரண்டு ஹாட்லைன் எண்களுக்கு ஏராளமான தொலைபேசிகள் வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, +8618610952903 என்ற எண்ணில் மூன்றாவது ஹாட்லைன் சேவையை தொடங்க தூதரகம் முடிவு செய்துள்ளது. ஹாட்லைன் எண்கள் +8618612083629 மற்றும் +8618612083617 என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை தற்போது வரை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்குதலால் இன்னும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Trending News