மெக்ஸிகோ: மத்திய மெக்ஸிகோவில் போதை பொருள் கடத்தி சென்ற வாகனத்தை துரத்திச் சென்ற காவலர்கள் 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்!
மத்திய மெக்ஸிகோவின் புயோப்லா பகுதியில், போதைப் பொருட்களை கடத்திச் செல்வதாக குறிப்பிட்ட வாகன குறிப்புடன் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வாகனத்தினை துரத்தி சென்றனர்.
இச்சம்பவத்தின் போது போதை பொருள் கடத்தல் குழுவிற்கும், காவலர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் காவலர்கள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலியான காவலர்கள் குழுவில் 1 பெண் காவலர் மற்றும் 5 ஆண் காவலர்கள் அடங்குவர்.
இச்சம்பவமானது மெக்ஸிகோவில் இருந்து 150 தொலைவில் அமைந்துள்ள அமேசாக் பகுதி காவல்துறை சராங்கத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைப்பெற்றுள்ளது என தகவல் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக அமேசாக் காவல்துறையினர் இரண்டு பேரை ஆயுதங்களுடன் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை சார்பில் தெரிவிக்கையில்.. ஆண்டிற்கு நடைப்பெறும் 90% குற்றங்கள் போதை கடத்தல் குழுக்களாலே நடத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.