கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்கள் எதுவும் 175 நாட்களை கடந்து ஓடவில்லை. கடந்த 2007ம் ஆண்டு ரஜினி நடித்த சிவாஜ் 200 நாட்களை தாண்டி ஓடியது. இதேபோல் எந்திரன் படமும் 175 நாட்களை கடந்தது. அதன் பிறகு ரஜினி நடிப்பில் வந்த அதிக நாட்கள் ஓடியது இல்லை..
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 'கபாலி' படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது படக்குழு.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியில் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் அளித்த படமாக இருந்தது.
கபாலியின் டீசர், டிரெய்லர், பாடல்கள் என்று இணையத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்ட ஒவ்வொரு வீடியோவுமே அட்டகாசமான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை ரஜினியின் மருமுகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்டு விட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் பணிகளை தொடங்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ரஜினியின் கபாலி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மிகப் பிரமாண்டமான விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
பா. ரஞ்சித் இயக்கத்தில் தாணு தயாரித்த கபாலி படம், ரஜினியின் சினிமா வரலாற்றில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நான்காவாது வாரமும் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் தொடர்கிறது. இன்றைக்கு ஒரு படம் ரூ 500 கோடிகளுக்கு மேல் வசூலித்து இந்திய சினிமாவை பிரமிக்க வைத்துள்ளது.
ரஜினிகாந்த் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து ‘சூப்பர் ஸ்டாராக’ உயர்ந்தார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் 1973-ல் பெங்களூர் போக்குவரத்து கழக பஸ்சில் அவர் பணியாற்றினார். அதன்பிறகு சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார். அப்போது டைரக்டர் கே. பாலசந்தர் மூலம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடிகராக அறிமுகமானார்.
ரஜினியின் ‘கபாலி’ வெற்றிப்படம் என அறிவிப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, இயக்குனர் பா.ரஞ்சித், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயண், நடிகர்கள் ஜான்விஜய், கலையரசன், தருண்கோபி, கிருத்திகா மற்றும் படக்குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.
ரஜினியின் ‘கபாலி’ கடந்த 22-ம் தேதி ரிலீஸ் ஆனது. இதை திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர் மக்கள்.
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ரஜினியின் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. உலக அளவில் அதிக வசூல் செய்த படங்கள் கபாலி 6 வது இடத்தில் உள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'கபாலி' படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தமிழக மக்களுக்கு ரஜினி தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
‘கபாலி’ நேற்று ரிலீஸ் ஆனது. இதை ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர்.
முதல் நாளில் ரஜினி படத்தை பார்க்க ‘கபாலி’ டிக்கெட் வாங்க ஆயிரக்கணக்கானோர் அலை மோதினார்கள். ‘டிக்கெட்’ என்ன விலை என்றாலும் படம் பார்த்தே தீர்வது என்பதில் பெரும் பாலானோர் உறுதியாக இருந்தனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பத்து மணிக்கு 'கபாலி' மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு நிமிடம் பத்து வினாடிகள் அடங்கிய இந்த மேக்கிங் வீடியோ கோடிக்கணக்கான ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேக்கிங் வீடியோ மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.